/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி தொழிலாளர் முகாமில் இஃப்தார் நிகழ்ச்சி
/
அபுதாபி தொழிலாளர் முகாமில் இஃப்தார் நிகழ்ச்சி
மார் 17, 2025

இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) அபுதாபி மண்டலம் பனியாஸ் கிளின்கோ கிளை யில் இஃப்தார் நிகழ்ச்சி முஹைதீன் ஆலிமின் கிராத்தோடு, மண்டல துணை தலைவர் பின்னத்தூர் ராஃபி தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. மண்டல தலைவர் முஹம்மது தௌஃபிக் வரவேற்பு நிகழ்த்தினார். துபாயிலிருந்து வருகை புரிந்த IWF அமீரக தலைவர் அப்துல் ஹாதி ஃபித்ரா, சதக்கா, ஜகாத்தின் நன்மைகள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
மக்ரிப் தொழுகை பிறகு இரண்டாம் அமர்வில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து அமீரக தலைவர் அப்துல் ஹாதி உரை ஆற்றினார். கிளின்கோ நிர்வாகிகள் கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் அமீரக துணை செயலாளர் அபுல் ஹஸன், அபுதாபி மண்டல பொருளாளர் எமனை சர்புதீன் துபாய் மண்டல நிர்வாகிகள் கீழை ஜைனுல் ஆப்தீன், முத்துப்பேட்டை சாதிக், அல்அய்ன் மண்டல நிர்வாகி ஜலால், சவுதி அல்கஸீம் மண்டல முன்னாள் செயலாளர் ஷக்கீல், அபுதாபி சிட்டி கிளை தலைவர் ஆரிஃப், ஷாபியா சாகுல், ஹாஃபிழ் அப்பாஸ் உட்பட 80க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிளின்கோ கிளை நிர்வாகிகள் ஜப்பார் , அலாவுதீன் , ஷேக் , இக்பால், கனி மற்றும் இவர்களுடன் பணி புரியும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த சகோதரர்கள் மிகச்சிறந்த முறையில் செய்து இருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement