/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அஜ்மானில் சர்வதேச கல்விக் கண்காட்சி
/
அஜ்மானில் சர்வதேச கல்விக் கண்காட்சி

அஜ்மான் : அஜ்மான் ஹாஸ்பிட்டாலிட்டி மையத்தில் அஜ்மான் வர்த்தக சபையின் ஏற்பாட்டில் அமீரக கல்வி அமைச்சகத்தின் ஆதரவுடன் 11வது சர்வதேச கல்வி மற்றும் பயிற்சி தொடர்பான கண்காட்சியை அஜ்மான் மாநகராட்சியின் தலைவர் ஷேக் ராஷித் பின் ஹுமைத் அல் காசிமியின் தலைவர் திறந்து வைத்து அங்கு பங்கேற்றுள்ள பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளை பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் அஜ்மான் பல்கலைக்கழகம், டாக்டர் அன்வர் கர்காஸ் டிப்ளமேட்டிக் அகாடமி உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள், ஓமன், அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி நிறுவனங்கள், வழிகாட்டி மையங்கள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன. உயர் கல்வி தொடர்பான கருத்தரங்கும் நடந்தது.
இந்த கண்காட்சியை 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement