/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழக மாணவி சாதனை
/
துபாயில் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழக மாணவி சாதனை
துபாயில் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழக மாணவி சாதனை
துபாயில் சி.பி.எஸ்.இ. 12 ஆம் வகுப்பு தேர்வில் தமிழக மாணவி சாதனை
மே 18, 2024

துபாய் : சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வில் உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று தமிழக மாணவி ஆலியா ருமானா சாதனை படைத்துள்ளார்.
துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் படித்த தமிழக மாணவி ஆலியா ருமானா 486 மதிப்பெண்கள் பெற்று 97.2 சதவீத மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு ஆங்கிலம் 98, கணிதம் 95, இயற்பியல் 95, வேதியியல் 98, உயிரியல் 100 ஆகும். குறிப்பாக உயிரியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உயிரியல் பாடத்தில் வளைகுடா பகுதியில் 100 க்கு 100 பெறுபவர்கள் மிகவும் அரிதானது. அத்தகைய சாதனையை இந்த மாணவி படைத்துள்ளார்.
இவர் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரை சேர்ந்தவர். அந்த மாணவியின் தந்தை சிராஜுதீன் தனியார் நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் வேலை செய்து வருகிறார். தாயார் பீமா ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
சி.பி.எஸ்.இ. பிளஸ் டூ தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஆலியா ருமானா கூறியதாவது : மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதே தனது இலட்சியம் ஆகும். அதற்காக நீட் தேர்வையும் நல்ல முறையில் எழுதியுள்ளேன் என்றார்.
சிறப்பிடம் பெற்ற மாணவி ஆலியா ருமானாவுக்கு பள்ளிக்கூட முதல்வர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்த மாணவி புற்றுநோய் பாதித்தவர்களுக்கு தனது தலைமுடியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement