/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ராசல் கைமாவில் சர்வதேச யோகா தினம்
/
ராசல் கைமாவில் சர்வதேச யோகா தினம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராசல் கைமா : ஐக்கிய அரபு அமீரகத்தின் ராசல் கைமா நகரில் 10வது சர்வதேச யோகா தின நிகழ்ச்சி இந்திய துணை தூதரகத்தின் ஆதரவுடன் இந்திய மக்கள் பேரவை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய துணை தூதர் சதீஷ் குமார் கலந்து கொண்டார்.
அவர் தனது உரையில் யோகாவின் சிறப்புக்கள் குறித்து விவரித்தார். மேலும் 10 வது சர்வதேச யோகா தினத்தை சிறப்பான வகையில் நடத்த ஏற்பாடு செய்திருந்த இந்திய மக்கள் பேரவையின் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement