/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மதீனாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி
/
மதீனாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி

மதீனா: சௌதி அரேபியாவின் மதீனா நகரில் உள்ள மன்னர் சல்மான் சர்வதேச கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மையத்தில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி சர்வதேச புத்தகக் கண்காட்சி தொடங்கியது.
நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் 300 க்கும் மேற்பட்ட சௌதி அரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளன.
சௌதி அரேபியா அரசின் கலாச்சார துறையானது இந்த புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்துள்ளது.
படைப்பாற்றலை இளைஞர் மத்தியில் மேம்படுத்தும் வகையிலும், அது சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் வகையில் இந்த கண்காட்சி நடக்கிறது.
இந்த கண்காட்சியையொட்டி தினமும் பல்வேறு எழுத்தாளர்களின் இலக்கியம் சார்ந்த கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடக்கிறது.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை மாலை 2 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இந்த கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிடலாம்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement