sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

/

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு


மார் 13, 2025

Google News

மார் 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய்: துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி சங்க தலைவர் பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் வழிக்காட்டுதலின் படி சங்க பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் தலைமை வகித்தார். தொடக்கமாக கட்டுமாவடி ஷேய்க் இறைவசனங்களை ஓதினார்.

மூத்த நிர்வாக குழு உறுப்பினர் ஃபசுர்தீன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழக வக்ப் வாரிய முன்னாள் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் தனது தலைமை உரையில் இஃப்தார் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். கல்லூரியில் படித்து வரும் வசதியற்ற மாணவ, மாணவியரின் உயர் கல்விக்கு அனைவரும் உதவ ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். அவருக்கு முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் சிகரம் தொட்ட ஜமாலியன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.


துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் துபாய் கிங்ஸ் கல்லூரி மருத்துவமனை டாக்டர் ஹக்கீம், ஸாலிஹீன் மருத்துவ கல்லூரி திட்ட இயக்குனர் பாரூக் ஹாஜியார், திருச்சி பிரிவின் சார்பாக சிராஜுதீன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் சூப்பர்சோனிக் குழும மேலாண்மை இயக்குனர் ஷாஹுல் ஹமீது, மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், ஷார்ஜா குவைத் மருத்துவமனை மேலாண்மை அதிகாரி ஆசிக் அஹ்மத், அல் மஜ்ரா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜாஹிர் ஹுசைன், பார்ம் பாஸ்கட் மேலாண்மை இயக்குனர் வலசை ஃபைசல், அஜ்மான் - மருத்துவ கல்லூரி பேராசிரியர் முனைவர் நஷீருல்லாஹ், பொன்னாடை வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

சங்க துணை தலைவர் ஜாபர் சித்தீக் முன்னாள் மாணவர் சங்கத்தின் செயல்பாடுகள், பணிகள் உள்ளிட்டவை குறித்து விவரித்தனர். மேலும் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். துணை பொதுச் செயலாளர் மன்னர் மன்னன் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் 150 க்கும் அதிகமான முன்னாள் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


விழா சிறப்புடன் நடைபெற நிர்வாக குழு உறுப்பினர் நவாசுதீன், அலாவுதீன், பைரோஸ்கான், சாஹிம், அப்துல் கனி, யூனுஸ், சயீத் அபுதாஹிர், பைசல் ரஹ்மான், உள்ளிட்டோர் துணை நின்றனர். நிறைவாக பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் நன்றியுரை நிகழ்த்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

- நமது செய்தியாளர் காஹிலா



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us