/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

மார் 13, 2025

அபுதாபி: அபுதாபியில் வாழ் மதுக்கூர் மக்களின் ஒன்றுகூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி சீரும், சிறப்புமாக நடைபெற்றது. கடந்த ஆண்டு (2024) இதே ரமளான் மாதத்தில் மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் என்ற அமைப்பு இறையருளால் ஏற்படுத்தப்பட்டது. ஓன்று கூடலின் துவக்கமாக மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அனைவரையும் வரவேற்று, அமைப்பின் நோக்கம் பற்றி பேசினார்.
பி.டி.இ.எ. ஃபாருக் கடந்த வருடம் அமைப்பின் சார்பாக எடுக்கப்பட்ட முயற்சிகளை பற்றி பேசினார். எம்.ஐ.. அனஸ் ஒரு வருடத்தின் நிதி நிலை அறிக்கை பற்றி விவரித்தார். மதுக்கூர் எம்.அப்துல்லாஹ் அமைப்பின் கல்வி சார்ந்த எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்தார். கலந்து கொண்ட அனைவரிடமிருந்தும் அமைப்பின் கல்வி செயல் திட்டத்திற்கான ஆலோசனைகள் பெறப்பட்டது. எதிர்காலங்களில் மருத்துவ தேவை மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்வது என்றும் ஏக மனதாக தீர்மானிக்கப் பட்டது.
நிறைவாக இஃப்தார் மற்றும் இரவு உணவோடு நிகழ்வு நிறைவு பெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் நிறுவன நிர்வாகிகளான எம்.அப்துல்லாஹ், மதுக்கூர் ஜாபர் ஸாதிக், ஃபாருக் மற்றும் எம்.ஐ.. அனஸ் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement