sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

செய்திகள்

/

ஜெர்மனி தமிழ் வான் அவை கௌரவித்த மூன்று சாதனைப் பெண்கள்

/

ஜெர்மனி தமிழ் வான் அவை கௌரவித்த மூன்று சாதனைப் பெண்கள்

ஜெர்மனி தமிழ் வான் அவை கௌரவித்த மூன்று சாதனைப் பெண்கள்

ஜெர்மனி தமிழ் வான் அவை கௌரவித்த மூன்று சாதனைப் பெண்கள்


ஏப் 11, 2024

Google News

ஏப் 11, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெர்மனியிலிருந்து இயங்கி வருகின்ற தமிழ் வான் அவையின் நிறுவனர் கௌரி சிவபாலன் (கௌசி) சர்வதேச ரீதியில் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிறுகளில் இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளையும் இலக்கிய ஆளுமைகளுடன் கலந்துரையாடல்களையும் மற்றும் சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளையும், ஆளுமைகளை இனம்கண்டு அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார். இவரது இந்தத் தமிழ் வான் அவை தளத்துக்கு உலகளாவிய ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது.

பிரசித்தி பெற்ற ஆளுமைகளை வாழும் போதே வாழ்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் அவர்களை இனம் கண்டு, அவர்களோடு தொடர்பு கொண்டு, அவர்கள் சாதித்த விடயங்களையும் அவர்கள் பெற்ற விருதுகளையும் இன்றைய சமூகத்துக்கும், குறிப்பாக இளையோர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ் வான் அவை மூலம் அவர்களைக் கௌரவப்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மூலமாக வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தும் போற்றுதலுக்குரிய தொண்டைச் செய்து வருகின்றார். அவருக்குப் பலரும் பக்கபலமாக இருந்து செயல்படுகின்றார்கள்.




அந்த வகையில் கடந்த மாதம் 29ஆம் தேதி தமிழ் வான் அவை நடத்திய மகளிர்தின சிறப்பு நிகழ்ச்சியில் மூன்று சாதனைப் பெண்களுக்கு விருதுகள் கொடுத்துத் தமிழ் வான் அவை கௌரவித்தது.

கௌரவிக்கப்பட்ட மூன்று சாதனைப்பெண்களும் முறையே:




முனைவர் மனோன்மணி சண்முகதாஸ். இவருக்கு “பைந்தமிழ் ஒளவை” என்ற விருது வழங்கப்பட்டது.




பேராசிரியர்சித்திரலேகா மௌனகுருக்கு “பெண்ணியச் செயல்வாதி” என்ற விருது வழங்கப்பட்டது.

பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடிக்கு “செயலாற்றுச் செம்மல்“ என்ற விருது வழங்கப்பட்டது.




மூன்று சாதனைப் பெண்களுக்கும் விருதுகள் வழங்கிக் கௌரவித்ததில்தமிழ் வான் அவைபெருமைகொள்கிறது.

இவர்களதுஆவணப்படங்களைக்காண:




https://youtu.be/AHNZfpBdiG8

https://www.youtube.com/watch?v=SJFI3Tot974




https://youtu.be/2sEnCc1Eh9Q

- கோவிலூர்செல்வராஜன், இலண்டன் தமிழ் வான் அவை உறுப்பினர்





Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us