sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

கனடா “காலம்” இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் - இலக்கியப் பங்களிப்பு

/

கனடா “காலம்” இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் - இலக்கியப் பங்களிப்பு

கனடா “காலம்” இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் - இலக்கியப் பங்களிப்பு

கனடா “காலம்” இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம் - இலக்கியப் பங்களிப்பு


மார் 28, 2025

மார் 28, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வட அமெரிக்த் தமிழ் எழுத்தாளர்கள் அமைப்பை (நடவு) வெற்றிகரமாக நிறுவிய பிறகு, தமிழ் இலக்கிய உலகை மேலும் அணுகி புரிந்துகொள்வதற்காக எழுத்தாளர்களையும் பதிப்பாளர்களையும் நேரில் சந்திக்கத் தொடங்கியுள்ளேன். இந்த சந்திப்புகள் மூலம் அவர்களின் படைப்புலக பயணங்களை கேட்டறிந்து, தமிழ் எழுத்துக்கு அவர்கள் செய்த பங்களிப்புகளை ஆழமாக புரிந்துகொள்ள விரும்புகிறேன். இது எனது சொந்த எழுத்துப் பயணத்திற்கும் ஒரு புதிய தூண்டுதலாக இருக்கும்.
இந்த வாரம், தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் “காலம்” மாத இதழின் ஆசிரியர் செல்வம் அவர்களை கனடாவில் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எங்களின் உரையாடலில் தமிழ் எழுத்து, பதிப்புரிமை, இன்றைய தமிழ் இலக்கியத்தின் சவால்கள், எதிர்காலத் திட்டங்கள் பற்றியப் பல பயனுள்ள விவாதங்கள் இடம்பெற்றன. கீழேயுள்ள கட்டுரையில், இந்த உரையாடலின் முக்கியமான அம்சங்களைப் பகிர்ந்திருக்கிறேன்.

தமிழ் இலக்கிய உலகில் “காலம்” என்ற பெயர்:


தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவர் செல்வம் அருளானந்தம். அவர் வெறும் எழுத்தாளராக மட்டுமல்ல, தமிழ் இலக்கியத்தின் பங்களிப்புகளை ஆழமாகப் புரிந்துகொண்டு, தமிழர் சமூகத்துக்கான ஒரு கலைப் புரட்சியாளராகவும் திகழ்கிறார். 'காலம்' மாத இதழின் ஆசிரியராக அவர் புரியும் பணிகள் தமிழர் இலக்கியத்திற்கும், புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கும் நிலையான தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவையாகும்.


இலக்கியக் கனவின் பிறப்பு:


செல்வம் அருளானந்தம் ஈழத்தில் பிறந்து, வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே வாசிப்பில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட அவர், தமிழ் இலக்கியத்தின் மீது பேரார்வம் கொண்டிருந்தார். புலம்பெயர்ந்து பிரான்சிற்கும், பின்னர் கனடாவிற்கும் சென்ற பின்னும், தனது இலக்கிய ஆசைகளை மறக்கவில்லை. 1980களின் ஆரம்பத்தில், அவர் பிரான்சில் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இலக்கியவாதிகளுடன் இணைந்து இலக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.


காலம் இதழின் தோற்றம்:


1990-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து வெளியிடப்பட்ட 'காலம்' இதழ், புலம்பெயர்ந்த தமிழர்களின் இலக்கியத் தொலைநோக்கைப் பிரதிபலிக்கும் ஒரு முதன்மையான இதழாக மாறியது. இப்பத்திரிக்கை என்றும் அனைத்துலகத் தமிழ் சமூகத்தின் அரசியல், சமூக, மற்றும் பண்பாட்டு அசைவுகளைப் பதிவு செய்யும் இலக்கிய ஊடகமாகவும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் மேடையாகவும் இருந்து வருகிறது.


காலம் இதழில் இலங்கையிலிருந்து ஏஜே கனகரட்னா, சோ.பத்மநாதன், கிருஷ்ணகுமார், டொமினிக் ஜீவா, பத்மநாப ஐயர், மு. தளையசிங்கம் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெற்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து தெய்வீகன்,ஆழியாள், இங்கிலாந்தில் இருந்து பேராசிரியர் சுகிர்த ராஜா, மு புஷ்பராஜன் ஜெர்மனியில் இருந்து பெ. கருணாகரமூர்த்தி, பிரான்சிலிருந்து ஷோபா சக்தி ஹாலண்டிலிருந்து தேவ அபிரா நோர்வேயிலிருந்து இளவாலை விஜயேந்திரன், கனடாவில் இருந்து அ. முத்துலிங்கம் என். கே. மகாலிங்கம், கவிஞர் சேரன் ஆகியோரும் இந்தியாவில் இருந்து சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், நாஞ்சில்நாடன் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் முதல் இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை காலம் பத்திரிக்கைக்கு பங்களிப்பு செய்து வந்தார்கள், வருகிறார்கள்! இவர்களின் ஆக்கங்கள் உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கியமானவை.


இலக்கியத்தை ஊக்குவித்த ஒரு தலைமுறை:


செல்வம் அருளானந்தம் இலக்கியத்துக்கு ஒரு புதிய வழிமுறையை உருவாக்க முயன்றார். அவரது கடின உழைப்பு தமிழ் இலக்கியத்தை வெறும் புலம்பெயர்ந்த எழுத்தின் ஒரு பகுதியாக மட்டும் அல்லாமல், தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய தளமாக மாற்றியது. அவர் பதிப்பித்த நூல்கள், தமிழ் மொழிக்கேற்ற புது எழுத்துருப் போக்குகளை உருவாக்கின. காலம் இதழின் ஆசிரியராக அவர் எந்தவொரு இயக்கத்திற்கும் சார்பாக இல்லாமல், முழுவதுமாக இலக்கிய முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்.


தமிழ் இலக்கியத்திற்கு அவரின் பங்களிப்பு:


1. காலம் மாத இதழின் நிறுவல்: தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கான முக்கியமான ஓர் அரங்கமாக அது விளங்குகிறது..


2. புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தல்: இளம் எழுத்தாளர்கள் எழுதத் தைரியம் பெற, அவர்களுக்கு வாய்ப்பு அளித்தல்.


3. பதிப்பக செயற்பாடுகள்: பல்வேறு எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டு கொண்டே இருக்கிறார்.


4. இலக்கிய விமர்சனங்கள்: தமிழ் இலக்கிய உலகின் முன்னேற்றம் குறித்து தனது கட்டுரைகளில் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.


அவரது பார்வை - இலக்கியத்தின் எதிர்காலம்:


செல்வம் அருளானந்தம் தமிழ் இலக்கியத்தை ஒரு சுதந்திரமான கலைத்துறையாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார். தமிழில் அரசியல்மயமான இலக்கியம் நிலவுவதாகவும், உண்மையான இலக்கியத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார். செல்வம் அருளானந்தம் தமிழிலக்கிய உலகில் ஒரு தனித்துவமான பாத்திரம் வகிப்பவர். அவர் காலம் மாத இதழை நடத்தி, தமிழ் இலக்கியத்தை உலக அளவில் பரப்பிக் கொண்டிருக்கிறார். தமிழ் எழுத்துக்களை பாதுகாக்கும் ஒரு ஒளிக்குமிழியாகவும், புது தலைமுறைக்குத் திருப்புமுனையாகவும் அவர் திகழ்கிறார்.


இன்று காலம் இதழின் வாயிலாக அவர் செய்கின்ற பணி, தமிழ் இலக்கிய உலகில் ஒரு நிலையான தடமாகவே இருக்கும். அவரது பங்களிப்புகள் தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்க முடியாதவை! காலம் இதழ் இன்று பலப் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளித்துத் தான் வெளிவருகிறது. இந்த இதழ் தொடர்ந்து வெளிவரத் தமிழ் உலகம் அவரைத் தொடர்பு கொண்டு உதவ முன் வர வேண்டும். அவரின் தொடர்பு மின்னஞ்சல் tamilbook.kalam@gmail.com


- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்







      Dinamalar
      Follow us