/
உலக தமிழர்
/
வெளிநாட்டு தகவல்கள்
/
அமெரிக்காவின் 3 வதுபெரிய சிலையாக ஹனுமன் மூர்த்தி
/
அமெரிக்காவின் 3 வதுபெரிய சிலையாக ஹனுமன் மூர்த்தி
டிச 23, 2024

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி சிலை 151 அடியாக முதல் இடத்தில் உள்ளது. அடுத்து இரண்டாம் இடத்தில்-110 அடியில் -ஃப்ளோரிடாவின் ஹாலன்டேல் கடற்கரையில் உள்ள பெகாசஸ் - டிராகன்! மூன்றாம் இடம் பிடித்திருப்பது டெக்ஸாஸ் மாநில ஹுஸ்டனில் ராமர் சீதையின் இணைப்பாக 90 அடியில் நிறுவப்பட்டுள்ள ஹனுமன் மூர்த்தி சிலை ! இது ஐதீக முறையில் பஞ்சலோகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
2024 - ஆகஸ்ட் - 15 ல் பிரம்மாண்டமாய் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட இதை அன்பு, --அமைதி, -ஆன்மிகம் மற்றும் ஒற்றுமையின் சின்னமாக குறிப்பிடுகிறார்கள். இது பத்மபூஷண் விருது பெற்ற பிரபல வேத அறிஞர் ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமியின் வியூகத்தில் உருவாக்கியுள்ளது. வட அமெரிக்காவின் ஆன்மிக மையமாக உருப்பெற்றுள்ள இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஹூஸ்டன் சுகர்லேன்டில் உள்ள இந்த பிரமாண்ட சிலையை ஒட்டி அஷ்டலக்ஷ்மி கோவில் உள்ளது.அங்கு பக்தர்கள் எப்போதும் ஜே - ஜே ! அமைதியான சூழலில் கோயிலின் உள்புறம் விசாலமாய் தியானகூடம்!. அங்கு விஷ்ணு சஹஸ்ரநாமம், இராமாயண பாராயணம், ஹனுமான் சுலோகங்கள், மகா ஆரத்தி என எப்போதும் பக்திமயம்! சனி, ஞாயிறுகளில் அங்கு மலிவு விலையில் சிற்றுண்டியும் உண்டு. கோவில் பராமரிப்பு முழுக்க தன்னார்வல தொண்டர்களால் நிர்வகிக்கப் படுகிறது.
இந்த ஹனுமன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய சிலை என்பது மட்டுமல்லை -இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள பெரிய ஹனுமன் சிலையும் கூட.
- என்.சி.மோகன்தாஸ் with ஆஸ்டின் R.தினேஷ்; பட கலவை : வெ.தயாளன்