sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

கனடாவின் புதிய குடியேற்றவிதிகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

/

கனடாவின் புதிய குடியேற்றவிதிகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

கனடாவின் புதிய குடியேற்றவிதிகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு

கனடாவின் புதிய குடியேற்றவிதிகள்: இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு


டிச 02, 2024

டிச 02, 2024


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கனடா, சர்வதேச மாணவர்களின் வருகையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கல்வி விசாக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், 2024-ம் ஆண்டில் கல்வி விசாக்களை 35% வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது. 2023-ம் ஆண்டில் 5,09,390 அனுமதிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2024-ல் 3,60,000 ஆக குறைக்கப்படும். இது வீட்டு வசதிகள் பொது சேவைகளின் மீதான விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு, குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) மோசடிகளை வேரறுப்பதன் மூலமும், மோசமான விளைவுகள், நிதி பாதிப்புகளிலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதன் மூலமும் சர்வதேச மாணவர் திட்டத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை கனடா எடுத்துள்ளது. 2025-2027 குடியேற்ற நிலைகள் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளபடி, கனடாவின் தற்காலிக வசிப்பவர்களின் எண்ணிக்கை அடுத்த சில ஆண்டுகளில் நீண்ட கால பொருளாதார இலக்குகளுடன் சீரமைக்கவும், தற்காலிக குடியுரிமை திட்டங்களின் நேர்மை மற்றும் தரத்தை வலுப்படுத்தவும் வெளி மாணவர்களின் எண்ணிக்கை குறையும்.

வேலை விசா விதிமாற்றங்கள்


2024 நவம்பர் 15 முதல், சர்வதேச மாணவர்கள் (இந்தியர்களும் உட்பட) வாரத்திற்கு 24 மணி நேரம் வரை கல்வியுடன் இணைந்தே வெளியில் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு முன்பு, 20 மணி நேர வேலை அனுமதி மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. மாணவர்களுக்கு கூடுதல் பொருளாதார சுதந்திரத்தை வழங்கும் நோக்கில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


நிதி தேவை அதிகரிப்பு


சர்வதேச மாணவர்கள்கனடாவில்வாழ்க்கைக்கான செலவுகளை நிரூபிக்க $20,635 CAD (முன்பு $10,000 CAD) செலவை காட்ட வேண்டும். இது கல்விச்செலவுகள் மற்றும் பயண செலவுகளை தவிர, கனடாவின்வாழ்கைச்செலவின்உயர்வைபிரதிபலிக்கிறது.


இந்திய மாணவர்களுக்கான விளைவுகள்


• விண்ணப்பதிட்டமிடல்: SDS திட்டம் நிறுத்தப்பட்டதாலும், கல்வி அனுமதிகள் குறைக்கப்பட்டதாலும், மாணவர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.


• நிதி சவால்கள்: அதிகரிக்கப்பட்ட நிதி தேவைகளுக்கு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.


• வேலை வாய்ப்புகள்: கூடுதல் வேலை நேர அனுமதி செலவுகளை சமாளிக்க உதவும்.


மாணவர் திட்டத்தை தவறாகப் பயன்படுத்தாமல் பாதுகாப்பதில் நியமிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் (DLI) முக்கியப் பங்காற்றுகின்றன. 2015 ஆம் ஆண்டு முதல், மாணவர் சேர்க்கை அறிக்கையை வலுப்படுத்த IRCC DLIகளுடன் இணைந்து செயல்படுகிறது. இணக்க அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளும் கடிதங்களை சரிபார்க்கவோ தவறியDLI கல்வி நிறுவனங்களுக்கு இப்போது விளைவுகள் ஏற்படும். இந்த மாற்றத்தின் மூலம், தேவையான தகவல்களை வழங்கத் தவறியதற்காக ஒரு வருடம் வரை புதிய சர்வதேச மாணவர்களை சேர்ப்பதில் இருந்து DLI இடைநீக்கம் செய்யப்படலாம்.


கனடாவில் உயர் கல்வி பெற நினைக்கும் இந்திய மாணவர்கள், இந்த மாற்றங்களைக் கவனமாகக் கவனித்து, தங்கள் திட்டங்களைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும்.

- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்







      Dinamalar
      Follow us