/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
தாய்லாந்து மன்னர் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழர்

ஜூலை 28, 2025

தாய்லாந்தின் தற்போதைய மாமன்னர் ராமா 10, வஜ்ரலங்கோனின் 73 ம் பிறந்தநாள் ஜூலை 28 மற்றும் தாய்லாந்து மகாராணி பிறந்த நாளான ஆகஸ்ட் 12ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படும். தாய்லாந்தின் அன்னையர் தினத்தை முன்னிட்டும், தாய்லாந்தின் தேசிய தொலைக்காட்சி (NBT), தாய்லாந்தின் பல்வேறு சமய மற்றும் சமூகம் சார்ந்தவர்களை அழைத்து அவர்களின் வாழ்த்துகளை பதிவு செய்து ஒளிபரப்பியது.
இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சார்பாக, தமிழகத்தின் காஞ்சிபுரம் வம்சாவளியில் வந்தவரும், தாய்லாந்து அரசவையில் திருப்பாவை, திருவெம்பாவை விழா உட்பட பல்வேறு சடங்குகளை நடத்தி வருபவரும், தாய்லாந்து நாட்டு மன்னரின், மஹா ராஜகுருவுமான, பிரா குரு பிதி ஸ்ரீவிசுதிகன் தலைமையில், வழங்கிய வாழ்த்து பதிவில், தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியைச் சேர்ந்த சரவணன் அழகப்பனும் தமிழர்களின் சார்பாக பங்கு பெற்றார்.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
Advertisement