/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
இலங்கை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்
/
இலங்கை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்
இலங்கை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்
இலங்கை சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இலவச மருத்துவ முகாம்
ஆக 03, 2025

கொழும்பு: சாய்ந்தமருதில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் அதனை கண்காணிக்கும் முகமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில், சாய்ந்தமருதில் இருக்கின்ற மக்கள் கூடும் இடங்களான கடற்கரைப் பிரதேசம், சந்தை, பள்ளிவாசல்கள், பாடசாலைகள் போன்ற இடங்களில் வருகைதரும் மக்களினுடைய சர்க்கரை அளவை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காகவும் எழுமாறாக கணக்கெடுப்பு இடம்பெற்று வருகின்றது.
அதில் ஓர் அங்கமாக வியாழக்கிழமை சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் லுஹர் தொழுகைக்காக வருகை தந்த மக்கள் அனைவருக்கும் நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச். சனூஸ் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement