/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
17வது ஆண்டு எடிசன் திரை விருதுகள் நிகழ்வின் முன்னோட்டம்
/
17வது ஆண்டு எடிசன் திரை விருதுகள் நிகழ்வின் முன்னோட்டம்
17வது ஆண்டு எடிசன் திரை விருதுகள் நிகழ்வின் முன்னோட்டம்
17வது ஆண்டு எடிசன் திரை விருதுகள் நிகழ்வின் முன்னோட்டம்
மார் 04, 2025

17வது ஆண்டு எடிசன் திரை விருதுகள் நிகழ்வின் முன்னோட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு பினாங்கில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ், பினாங்கு மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ சுந்தர்ராஜு, ஆட்சி குழு உறுப்பினர் குமரன், பினாங்கு மாநில மேயர் டத்தோ ராஜேந்திரன், டத்தோ பார்த்திபன், முதலமைச்சர் அலுவலக மேலாளர் டத்தின் பாரதி கலந்து கொண்டனர்.
நடிகர் சதீஷ் பேசும்போது, சினிமாவை தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்திருக்கலாம் ஆனால் அவர் பெயரில் விருது வழங்க வேண்டும் என எண்ணம் தோன்றியது செல்வகுமாரையே சாரும். கடத்த 16 ஆண்டுகளாக பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், என சினிமா துறைக்கு தொடர்ந்து விருது வழங்கிய ஊக்குவித்து வருகிறார் என்றார்.
டத்தோஸ்ரீ சுந்தரராஜ் பேசும்போது, நாங்கள் அரசியலில் பணி செய்யும்போது எங்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்வு என்னவென்றால் சினிமா துறையில் கோலோச்சிய எம்.ஜி.ராமச்சந்திரன். சினிமாவிலும், மக்கள் நல பணியிலும் எப்படி பணியாற்றினார் என்பதை அறிந்து எங்களுக்கெல்லாம் அவர் வழியில் மக்கள் பணி செய்து வருகிறோம் என தெரிவித்தார்.
இறுதியில் நடிகர் நடிகைகள் ஆன்லைனில் வாக்களிக்கும் போது நடிகர் சதீஷ் சிறந்த Entertainer என்ற பிரிவில் தனக்குத்தானே வாக்களித்து, அதற்குண்டான காரணத்தையும் தெரிவித்தார் டத்தோஸ்ரீ சுந்தரராஜு, நம் மாநிலத்திற்கு வருகை புரிந்த சதீஷ்க்கு முதல் வாக்கும், ராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றி இறந்த, அவரைப் பற்றிய படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது வாக்கும் அளித்தார்.
பத்திரிகையாளர்களும் முன்னணி தொழிலதிபர்களும் கலந்து கொண்டு தொடர்ச்சியாக வாக்களித்தனர். ஏப்ரல் ஐந்தாம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு Spice Arena என்ற அரங்கில் எடிசன் திரை விருதுகள் வழங்கு நிகழ்வு நடைபெறும் எனவும் பார்வையாளர்கள் டிக்கெட்டை எப்படி முன்பதிவு செய்வது என்பதை எடிசன் விருது குழு தலைவர் செல்வக்குமார் தெரிவித்தார்.
முதன் முறையாக பினாங்கில் நடவிருக்கும் எடிசன் பிலிம் பெஸ்டிவலில் (Edison Film Festival) 5 திரைப்படங்கள் அமரன், மகாராஜா, விடுதலை 2, மெய்யழகன், லப்பர் பந்து GSC Queens bay மாலில் ஆம் தேதி திரையிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் எடிசன் திரை விருது ரசிகர்களுக்கு தங்களுக்கு பிடித்தமான நடிகரின் படம் போட்ட டி-ஷர்டையும் (T-Shirt) விற்பனை செய்ய உள்ளதாக செல்வகுமார் தெரிவித்தார்.
- தினமலர் வாசகர் செல்வகுமார்
Advertisement