/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
லைபீரியாவில் தமிழ் புத்தாண்டு விழா
/
லைபீரியாவில் தமிழ் புத்தாண்டு விழா

லைபீரியாவின் தலைநகர் மன்றோவியாவில் தமிழ் புத்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. லைபீரியா தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில், தமிழர் பாரம்பரியத்தை போற்றும் வகையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் பங்கேற்று தமிழர் கலாச்சாரத்தையும் மரபுகளையும் மகிழ்வுடன் கொண்டாடினர். விழாவானது பாரம்பரிய வழிபாட்டு முறைகளுடன் தொடங்கப்பட்டது. இறை வணக்கம், முக்கனிகளுடன், கரும்பு, இனிப்பு வகைகள் உள்ளிட்டவை கொண்டு சிறப்பான பூஜைகள் நிகழ்த்தப்பட்டன.
தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டது. இந்நிகழ்வின் மூலம், தமிழ் மக்களின் ஒற்றுமை, கலாச்சார பண்பாட்டை பேணும் ஆழ்ந்த விருப்பம், மற்றும் லைபீரியாவில் உள்ள தமிழர் பண்பாட்டு ஒற்றுமை மேலும் வலுப்பெற்றது. இவ்விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த ராஜன் மற்றும் மோகன் ஆகியோரை தமிழ் சங்கம் உறுப்பினர்கள் வெகுவாக பாராட்டினர்.
'சங்கத்தின் சார்பில் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் - இனிய வசந்தம், இனிய தொடக்கம்!'
- நமது செய்தியாளர் அரவிந்த்
Advertisement