/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
லேகோஸ் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம்
/
லேகோஸ் முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம்
ஏப் 21, 2025

நைஜீரியா, லேகோஸ், இல்லுபேஜு முருகன் ஆலயத்தில் பங்குனி உத்திரம் 2025 சிறப்பாக கொண்டாடப்பட்டது. முருகப்பெருமானும் தேவியானையும் திருமணமான புனித நாளான பங்குனி உத்திரம், இல்லுபேஜு லேகோஸில் உள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில் எளிமையுடன் ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.
காலை 9.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை மற்றும் சங்கல்பம் நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சி ஆன்மிகமாக துவங்கியது. இதனைத் தொடர்ந்து 108 பால்குடம் வலம் வருதல் நிகழ்ச்சி எப்போதும் போல் பக்திமிகு சூழ்நிலையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் 'முருகனுக்கு அரோகரா!' என்ற முழக்கத்துடன் ஆலயத்தைச் சுற்றி பவனி வந்தனர்.
முற்பகல் 10.00 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் தீர்த்த ஜலம் உள்ளிட்ட பல புனிதப் பொருட்களால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அழகிய பூங்கொத்துகளும் அணிகலன்களும் அணிவிக்கப்பட்டிருந்த முருகப்பெருமான் தெய்வீகமாக ஜொலித்தார்.
மதியம் 12.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. 12.45 மணிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- தினமலர் வாசகி பிரதிமா
Advertisement