/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்ற நிர்வாகிகள் ( 2024- 2025)
/
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்ற நிர்வாகிகள் ( 2024- 2025)
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்ற நிர்வாகிகள் ( 2024- 2025)
நைரோபி தமிழ் பண்பாட்டு மன்ற நிர்வாகிகள் ( 2024- 2025)
ஜூன் 26, 2024

கென்யா: நைரோபியில் தமிழ் பண்பாட்டு மன்றத்தின் ஆண்டு பேரவை கூட்டம் 'இந்து கவுன்சில் ஆப் கென்யா' அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை மூத்த உறுப்பினர்கள் விளக்கேற்றி துவக்கி வைத்தனர். குழந்தைகளின் பரதநாட்டியக் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே துவங்கியது. கூட்டத்தில் தமிழ் குடும்பங்கள், நண்பர்கள் என அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
கூட்டத்தின் போது செயற்குழு உறுப்பினர்களை ஜனநாயக முறைப்படி ஆர்.எஸ். வெங்கட்ராமன் தேர்ந்தெடுத்தார்.
தலைவி: சுபஸ்ரீ சைலேஷ்; துணைத் தலைவி: சரண்யா வரதன்; செயலாளர்: உமா இராஜி இளங்கோவன்; இணை மற்றும் கலைச்செயலாளர்: ஏஞ்சலா செல்வராஜா; பொருளாளர்: புவனா வீரராகவன்; விளையாட்டு செயலாளர்: வித்யா சந்திரசேகர்.
செயற்குழு உறுப்பினர்களாக பவானி பாய் சுதாகர். கிருத்திகா வீரக்குமார், மரியா மீனாட்சி மார்டின் ஆகியோர் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பணிகளைத் திறம்படச் செய்ய முன்வந்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி அனைத்து தமிழ் நண்பர்களின் உதவியுடன் செவ்வனே ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்புடன் முடிவுற்றது.
- தினமலர் வாசகி சுபஸ்ரீ சைலேஷ்
Advertisement