/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
லாகோஸ் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை
/
லாகோஸ் முருகன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ஆக 31, 2025

லாகோஸ்; நைஜீரியா - புனிதமான திருவிளக்கு பூஜை மிகுந்த பக்தியும் ஆன்மிக உணர்ச்சியுடனும் லாகோஸ் முருகன் கோயிலில் நடைபெற்றது. அந்நிகழ்வில், குறிப்பாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்று, நம்பிக்கையுடன் விளக்குகள் ஏற்றி, உலக அமைதி, வளமை மற்றும் நலன் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
பூஜை பக்தி பாடல்கள் மற்றும் பஜனைகளுடன் தொடங்கி, அடுத்து திருவிளக்குகள் ஏற்றப்பட்டதால், கோயில் முழுவதும் தெய்வீக ஒளி பரவியது. பின்னர் வேத மந்திர ஓசைகளுடன், முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடத்தப்பட்டது.
நிகழ்ச்சி மங்கள ஹாரத்தி மற்றும் பிரசாதம் விநியோகத்துடன் நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திட பங்காற்றிய அனைத்து பக்தர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், ஆதாரதாரர்களுக்கும் கோயில் நிர்வாகம் இதயப்பூர்வ நன்றி தெரிவித்தது.
--- நமது வாசகர், பிரதிமா கோபிநாத்.
Advertisement