/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
நைஜீரியா லாகோஸ் முருகர் கோயிலில் மகா விநாயகர் சதுர்த்தி லட்சார்ச்சனை விழா

ஆக 31, 2025

லாகோஸ்; நைஜீரியா லார்ட் முருகர் ஸ்பிரிச்சுவல் ஃபவுண்டேஷன் சார்பில், ஆன்மிக நிறைவும், பக்தி பூர்வமான சூழலும் நிரம்பிய 16 நாள் விநாயகர் சதுர்த்தி லட்சார்ச்சனை விழா 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 முதல் 27 வரை லாகோஸ் முருகர் கோவிலில் சிறப்பாக நடத்தப்பட்டது.
நைஜீரியாவின் பல பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நிகழ்வை ஆன்மிக பூர்வமாக கொண்டாடினர்.
ஒவ்வொரு நாளும் தனித்த நட்சத்திரங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டு, குழந்தைகளின் கல்வி வெற்றி, கடன் நீக்கம், பொருளாதார வளம், உடல் நலம், குடும்பஒற்றுமை, சாந்தமான திருமணம், தொழில் முன்னேற்றம் மற்றும் முழுமையான நல்வாழ்வு ஆகியவற்றிற்காக சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சிகளில் தினமும் ஹோமம், அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை ஆகியவை பாரம்பரிய வேத முறைகளின் படி மிகுந்த பக்தியுடன் நடைபெற்றன. பெருமளவு பக்தர்கள் பங்கேற்று, விழாவின் புனிதத்தையும் ஆன்மிக ஆற்றலையும் உயர்த்தினர்.
ஆகஸ்ட் 27ஆம் தேதி மகா அபிஷேகம் மற்றும் இறுதி பிரார்த்தனை நடைபெற்றது. அதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆன்மிக ஒற்றுமையுடனும் பக்தி பூர்வமுமான சூழலிலும் விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
- --நமது வாசகர் ,பிரதிமா கோபிநாத்.
Advertisement