தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/விருந்தினர் பகுதி/குழந்தை பொருட்களுக்கு… இதோ இன்னொரு வாழ்க்கை!

குழந்தை பொருட்களுக்கு… இதோ இன்னொரு வாழ்க்கை!

குழந்தை பொருட்களுக்கு… இதோ இன்னொரு வாழ்க்கை!


UPDATED : செப் 20, 2026 08:15 AM

ADDED : செப் 19, 2026 01:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 20, 2026 08:15 AM ADDED : செப் 19, 2026 01:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குழந்தை பிறக்கப்போகிறது என்ற சந்தோஷத்தில், தேவையானது… தேவையில்லாதது என நிறைய பொருட்களை வாங்கி குவிப்பது இன்றைக்கு பல புதிய பெற்றோரிடம் இருக்கும் வழக்கம்.

ஆனால், குழந்தை வளர வளர, சில பொருட்கள் சில நாட்களிலேயே பயன்படுத்த முடியாமல் போய்விடும். அப்படி வீட்டில் ஓரமாக வைக்கப்படும் பொருட்களுக்கு மீண்டும் ஒரு பயன்பாட்டை உருவாக்குகிறார் கோவையை சேர்ந்த சங்கேதா.

ஐ.டி. துறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோதே எதிர்காலத்தில் பெற்றோராகப் போகிறோம் என்ற எண்ணத்தில் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்குவது பற்றி சிந்தித்திருக்கிறார்.

அப்போதுதான், 'ஒரு குழந்தைக்காக வாங்கப்படும் பொருட்களை சில மாதங்கள்தான் பயன்படுத்துகிறோம். அதன்பிறகு அவற்றை ஏன் அடுத்த குழந்தைக்காக பயன்படுத்தக்கூடாது?' என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அந்த எண்ணமே 'Bag It All - Let's Thrift' என்ற ப்ரீலவ்டு ஸ்டோர் உருவாக காரணமானது.

“குழந்தைக்காக ஆசையா வாங்குற பொருட்கள், ஒரு கட்டத்துக்கு பிறகு வீட்டுல சும்மாதான் இருக்கும். சில பொருட்களை ஒரு நாள், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள்தான் பயன்படுத்துவோம். அதற்காக ஒவ்வொரு முறையும் புதுசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல நிலையில் இருக்கிற பொருளை இன்னொரு குழந்தைக்கு பயன்படுத்தலாம்” என்கிறார் சங்கேதா.

இதற்கிடையே அவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததால், குழந்தைகளுக்கான பொருட்கள் குறித்த நேரடி அனுபவமும் கிடைத்திருக்கிறது. அந்த அனுபவத்துடன் தொழிலையும் தொடர்ந்து வளர்த்திருக்கிறார்.

முதலில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலமாகத் தொடங்கிய இந்த முயற்சிக்கு, கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் கிடைக்க ஆரம்பித்தனர். திருப்பூர், கோவை பகுதிகளில் ஸ்டால்களும் அமைத்து மக்களிடம் இந்த 'ப்ரீலவ்டு' கலாசாரத்தை அறிமுகப்படுத்தி வருகிறார்.

அதைத் தொடர்ந்து, “எங்களிடமும் பயன்படுத்தாமல் நல்ல நிலையில் இருக்கும் பொருட்கள் இருக்கிறது” என பலரும் சங்கேதாவை அணுக ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது மற்றவர்களிடமிருந்து பெறப்படும் பொருட்களையும் தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கிறார்.

வாங்குவது மட்டுமல்ல… வாடகைக்கும்!


குறுகிய காலத்துக்கு மட்டுமே தேவைப்படும் பொருட்களை வாங்காமல் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தும் வசதியும் இங்கு உள்ளது. தினசரி வாடகைக் கட்டணம் ரூ.150 முதல் தொடங்குகிறது.

பெண்களுக்கான ஆடைகள், குழந்தைகளின் ஆடைகள் மற்றும் காலணிகள், புத்தகங்கள், ஆக்சஸரீஸ், மேக்கப் பொருட்கள், குழந்தை பொருட்கள், டாய்ஸ், மகப்பேறு கால தேவைகள் என பல வகையான பொருட்கள் இங்கு வாங்கவும், விற்கவும் முடியும்.

“Pre-used அப்படீன்னு சொல்றதைவிட, 'Pre-loved'ன்னு சொல்றதுதான் எங்களுக்கு பிடிக்கும். ஏன்னா, ஒரு பொருளை யாரோ ஒருத்தர் ஆசையா வாங்கி, தேர்வு செய்து, பயன்படுத்தியிருப்பாங்க. அந்தப் பொருள் அடுத்தவர்கிட்ட போகும்போது, அதற்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்குது” என்கிறார் சங்கேதா.

தொடர்புக்கு: 99521 00944

Instagram: @bagitall_letsthrift

“குழந்தைக்காக ஆசையா வாங்குற பொருட்கள், ஒரு கட்டத்துக்கு பிறகு வீட்டுல சும்மாதான் இருக்கும். சில பொருட்களை ஒரு நாள், ஒரு மாதம் அல்லது சில மாதங்கள்தான் பயன்படுத்துவோம். அதற்காக ஒவ்வொரு முறையும் புதுசா வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நல்ல நிலையில் இருக்கிற பொருளை இன்னொரு குழந்தைக்கு பயன்படுத்தலாம்” - சங்கேதா


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us