மன அழுத்தத்தை துாக்கி போடுங்க! கற்றுத்தருகிறது Ctrl Alt Nature
மன அழுத்தத்தை துாக்கி போடுங்க! கற்றுத்தருகிறது Ctrl Alt Nature
UPDATED : ஜூலை 05, 2026 08:31 AM
ADDED : ஜூலை 04, 2026 02:50 PM

'வெல்னஸ் என்றாலே போரிங்…'
- இந்த எண்ணத்தை மாற்றி, சாகச விரும்பிகளையே தங்களது தனித்துவமான முறையால் ஈர்த்து வருகிறது கோவையைச் சேர்ந்த Ctrl Alt Nature எனும் ஜாலியான டீம்.
இதை இயற்கை மருத்துவ நிபுணர் டாக்டர் அஷ்வதிகா அசோக்கும், ஃபிட்னஸ் ஆர்வலர் கவுசல்யாவும் சேர்ந்து துவங்கியுள்ளனர்.
உடல், மனம், ஆற்றல், அறிவு, ஆன்மாவை ஒருங்கிணைத்து முழுமையான நல்வாழ்வை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். இதுதான் பிற வெல்னெஸ் அமைப்புகளுக்கும் இவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம்.
இதற்காக, இவர்கள் 12 ஆண்டுகளாக இயங்கி வரும் Coimbatore Adventure Club (CAC) உடன் இணைந்து கலக்குகின்றனர்.
''சாகசப் பயணங்களுக்கு இடையே ஒரு சிறிய இடைவெளி எடுத்து, ஒவ்வொருவரும் தங்களை புரிந்துகொள்ளும் அனுபவம்... ஆகா, அதை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்,'' என்கிறார் இந்த டீமில் உள்ள பெயர் வெளியிட விரும்பாத ஒருவர்.
மாதம் ஒருமுறை ஏதாவது ஒரு இடத்தில் சந்தித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து பிரமிக்கின்றனர் இவர்கள்.
'மனஅழுத்தம் குறைந்தது, நல்ல தூக்கம் கிடைத்தது, மது பழக்கத்தை தவிர்க்க முடிந்தது, வேலை அழுத்தத்தை எளிதாக சமாளிக்க முடிகிறது' என ஒவ்வொருவரும் சொல்கின்றனர்.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களிடையே இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
“சுய பராமரிப்பு என்பது கட்டாயம். ஆனால் அது சலிப்பாக இருக்க வேண்டியதில்லை. ஒரு புதிய அட்வென்ச்சரைப் போல இருக்கலாம்,” என்கின்றனர் அஷ்வதிகாவும் கவுசல்யாவும்.
மாதத்திற்கு குறைந்தபட்சம் ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள Ctrl Alt Nature-ன் அடுத்த வெல்னஸ் அனுபவ முகாம், இம்மாத மத்தியில் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 89030 59879.
