/
வாராவாரம்
/
விருந்தினர் பகுதி
/
கோவை அரசு கல்லுாரியில் படித்த நாமக்கல் கவிஞர்
/
கோவை அரசு கல்லுாரியில் படித்த நாமக்கல் கவிஞர்
ADDED : ஆக 02, 2025 11:39 PM

த மிழறிஞரும், கவிஞருமான நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர். மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர்.
'கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்று வருகுதுசத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்'
-- என்னும் பாடலை, உப்புச் சத்தியாகிரகத் தொண்டர்களின் வழிநடைப் பாடலாகப் பாடி செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார். இவ்வளவு சிறப்புக்குரியவரான இவர், தனது உயர்நிலைக் கல்வியை, கோவையில் படித்தார் என்பது தெரியுமா?
நினைவுகூர்கிறார், கோவையை சேர்ந்த பேராசிரியர் நடராஜன்...
நாமக்கல் கவிஞர், தமிழில் மட்டுமல்ல, ஓவியத்திலும் சிறப்புக்குரியவர். இவர், தன்னுடைய உயர்கல்வியை, கோவை அரசுக் கல்லுாரியில் படித்தார். அப்போது, டவுன்ஹாலில் தான், அரசு கலைக்கல்லுாரி செயல்பட்டு வந்தது.
பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது, இவர் ஏதோ வரைந்து கொண்டிருப்பதை பார்த்து, கடிந்து கொண்ட ஆசிரியர், அப்போது தான், இவரின் ஓவியத்திறமையை கண்டு வியந்தார். விக்டோரியா மகாராணியையும், அரசரையும், சிம்மாசனத்தில் இருக்கும் மாதிரியான ஓவியத்தை வரைந்து, அனுப்பி வைத்தார். ஆச்சரியமடைந்த அவர்கள், நாமக்கல் கவிஞருக்கு தங்க மெடல் பரிசளித்தனர்.
இதன் ஆரம்பப்புள்ளி துவங்கியது, கோவை அரசுக் கலைக் கல்லுாரியில் தான். இவர், கோவையில் படித்தது, கோவையில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய பெருமை.