sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

விருந்தினர் பகுதி

/

நம் வாழ்க்கையை நாம் வாழ கற்றுக் கொடுக்கும் புத்தகம்

/

நம் வாழ்க்கையை நாம் வாழ கற்றுக் கொடுக்கும் புத்தகம்

நம் வாழ்க்கையை நாம் வாழ கற்றுக் கொடுக்கும் புத்தகம்

நம் வாழ்க்கையை நாம் வாழ கற்றுக் கொடுக்கும் புத்தகம்


ADDED : ஆக 02, 2025 11:42 PM

Google News

ADDED : ஆக 02, 2025 11:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வா சகர்கள் வாசிக்க வேண்டிய நுால்கள் குறித்து, வாசித்தவர்கள் வாசித்த புத்தகங்களில் இருந்து, தங்களின் வாசிப்பு அனுபங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த வாரம் ஆங்கில எழுத்தாளர் பாபி டபி எழுதிய ''The Perils of Perception' (கருத்தின் ஆபத்துகள்) என்ற ஆங்கில நுால் குறித்து, கோவை பால்கன் (Falcon) நிறுவனத்தின் (CEO) தலைமை செயல் அலுவலர் சவுந்தரராஜன் தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நான் சமீபத்தில் ஆங்கில எழுத்தாளர் பாபி டபி எழுதி, 'The Perils of Perception' (கருத்தின் ஆபத்துகள்) என்ற புத்தகத்தை படித்தேன்.

உலகம் முழுவதும் வாழும் மக்களின் பொதுவான மனநிலை எப்படி இருக்கிறது என்பதை, உளவியல் அடைப்படையில் ஆராய்ந்து இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார் பாபி டபி.

உண்மைக்கும் மக்களின் எதார்த்தமான புரிதலுக்கும் உள்ள வேறுபாடுகளை அழகாக விளக்குகிறார். உண்மை ஐந்து சதவீதம் என்றால், மக்கள் அதை 20 சதவீதமாக மிகைப்படுத்தி புரிந்து கொள்கின்றனர். அதுதான் உண்மை என்று நம்பவும் செய்கின்றனர்.

இது பற்றி, 40 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் விஷயங்களை கள ஆய்வு செய்து, நுாலை எழுதி இருக்கிறார்.

உதாரணமாக, பிரான்சில் இஸ்லாமியர்கள், 27 சதவீதம் பேர் வாழ்வதாக அங்குள்ள மக்கள் மற்றும் சமூக அமைப்புகள் நம்புகின்றனர். ஆனால் அந்த நாட்டின் சென்சஸ் புள்ளி விபரத்தின் படி, 8 சதவீதம் இஸ்லாமியர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.

இதை அங்குள்ள ஊடகங்களும் தவறாக பதிவு செய்கின்றன. இது போன்ற தவறான நம்பிக்கைகள் விபரீதமான புரிதல்களையும், நாட்டில் பல குழப்பங்களையும் ஏற்படுத்துகின்றன.

சமூக வலைத்தளங்களில் வரும் தவறான செய்திகள் மற்றும் பதிவுகள் மக்களின் அடிப்படை சிந்தனையையும், உணர்வுகளையும் மாற்றி விடுகின்றன. ஜாதி, மதம், அரசியல், பொருளாதாரம், வியாபாரம், தொழில் சார்ந்து எல்லா விஷயங்களிலும் தவறாக சிந்திக்க வைக்கிறது.

இது போன்ற விஷயங்களில் ஸ்வீடன் நாட்டு மக்களிடம், 35 சதவீதம் சரியான புரிதல் இருக்கிறது என்றும், இந்தியர்களின் புரிதல் 45 சதவீதம் தவறாக இருக்கிறது எனவும், இந்த நுாலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தை படித்தால் நம் தவறான கருத்துக்களை சரி செய்து கொள்ள முடியும். ஒரு விஷயத்தை உண்மை நிலை ஆராய்ந்து பார்க்கமால், நம்பக்கூடாது என்பதை, இந்த நுால் வலியுறுத்துகிறது.

மற்றவர்கள் கருத்துகளை உறுதிப்படுத்தாமல், அதை துாக்கி சுமக்க கூடாது. அடுத்தவர் வாழ்க்கையை நீ வாழாதே, உன் வாழ்க்கையை வாழக்கற்றுக்கொள் என்கிறது இந்த புத்தகம்.






      Dinamalar
      Follow us