sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

தலையங்கம்

/

வக்ப் மசோதா நிறைவேறினாலும் சர்ச்சைகள் நீடிக்கவே செய்யும்!

/

வக்ப் மசோதா நிறைவேறினாலும் சர்ச்சைகள் நீடிக்கவே செய்யும்!

வக்ப் மசோதா நிறைவேறினாலும் சர்ச்சைகள் நீடிக்கவே செய்யும்!

வக்ப் மசோதா நிறைவேறினாலும் சர்ச்சைகள் நீடிக்கவே செய்யும்!


PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முஸ்லிம்கள் தானமாக வழங்கும் சொத்துக்களை நிர்வகிக்கும், வக்ப் வாரியம் தொடர்பான சட்டங்களில், பல ஆண்டுகளுக்கு பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்தது. இப்படி திருத்தப்பட்ட, 'வக்ப் திருத்த மசோதா - 2025' லோக்சபாவில் கடந்த 2ம் தேதி, 14 மணி நேர விவாதத்திற்குப் பின்னும், ராஜ்யசபாவில், 17 மணி நேர விவாதத்திற்கு பிறகும் நிறைவேறியது.

அதாவது, பார்லிமென்டின் இரு சபைகளிலும், எந்த விதமான கூச்சல் குழப்பம், சபை ஒத்திவைப்பு, எம்.பி.,க்களால் இடையூறு என, எந்தப் பிரச்னையும் இல்லாமல், நீண்ட விவாதத்திற்கு பின், மசோதா நிறைவேறியுள்ளது பாராட்டத்தக்கது. குறிப்பாக, காங்கிரஸ் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியினர், சபையிலிருந்து வெளிநடப்பு செய்யாமல், ஆக்கப்பூர்வமான வகையில் விவாதத்தில் பங்கேற்றது சிறப்பாக இருந்தது.

வக்ப் வாரிய சொத்துக்களை சிறப்பான முறையில் நிர்வாகம் செய்யவும், அதில் ஒளிவுமறைவற்ற தன்மையை உருவாக்கவுமே, தற்போதைய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு தரப்பில் வாதிடப்படுகிறது. குறிப்பாக, வக்ப் வாரியங்களில், முஸ்லிம்கள் அல்லாதவர்கள் உறுப்பினராக இடம் பெறும் போது, நிர்வாக குளறுபடிகள் தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், வக்ப் வாரிய சொத்துக்கள் பல, தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளன. பல சொத்துக்கள் வழக்கு விவகாரங்களில் சிக்கியுள்ளன. மேலும், பல சொத்துக்களின் நிலைமை என்ன என்றே தெரியாமல் உள்ளது. அந்தச் சொத்துக்களை பாதுகாக்கவும், சிறப்பான முறையில் நிர்வகிக்கவுமே, சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது, மத்திய அரசின் வாதமாகும்.

ஆனால், எதிர்க்கட்சிகளோ, 'முஸ்லிம்கள் அல்லாதவர்களை, வக்ப் வாரியத்தில் இடம்பெறச் செய்தால், முஸ்லிம்களின் அதிகாரம் பறிபோகும். வாரியத்தின் செயல்பாடுகளில் அரசின் தலையீடு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி, இந்த மசோதா வாயிலாக, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்களையும், மசூதிகளையும், மத்திய அரசு பறிக்க முடியும். முஸ்லிம் சமூகத்தினரை ஓரங்கட்ட முடியும்' என, குற்றம் சாட்டியுள்ளன.

தற்போதைய நிலையில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மசோதாவானது, மத சுதந்திரத்திற்கும், சிறுபான்மை சமூகத்தினரின் நம்பிக்கைகளுக்கும் எதிரானது என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அதனால், இந்தச் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், 'இந்த சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கும் முன், முஸ்லிம் சமூகத்தினரிடம், மத்திய அரசு ஆலோசனை நடத்தவில்லை. மசோதாவை ஆய்வு செய்த பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் இடம் பெற்றிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பரிந்துரைகள் எதுவும் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் தெரிவித்த கருத்துகள் எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. சிறுபான்மை சமூகத்தினரை பலவீனப்படுத்தும் நோக்கத்துடனே மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது' என்றும், பல முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

எனவே, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டு உள்ள இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்திருந்தாலும், இதுதொடர்பான விவாதங்கள், சர்ச்சைகள் சில ஆண்டுகளுக்கு நீடித்துக் கொண்டே இருக்கும் என்பதில் மாற்றமில்லை. அதுமட்டுமின்றி, இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கலாகி உள்ளன.

அதனால், உச்ச நீதிமன்றத்தின் தீவிர பரிசீலனைக்கு இந்த சட்டத்திருத்த மசோதா ஆட்படும். அரசியல் சட்ட ரீதியாக, இது செல்லத்தக்கதா என்பதையும், நீதிமன்றமே உறுதிசெய்ய நேரிடும்.

மேலும், வக்ப் சட்டத் திருத்த மசோதாவுக்கான விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அப்போது, மசோதா குறித்து, எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் சமூக தலைவர்களும் தெரிவித்த கவலைகள் சரிசெய்யப்படும் என்றும், எதிர்பார்க்கலாம்.






      Dinamalar
      Follow us