PUBLISHED ON : ஆக 18, 2025 12:00 AM

நாளை உலக புகைப்பட தினம்மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி கண்காட்சி நடத்துகிறது.
பின்னர் லூயி டாகியர் உருவாக்கிய டாகியரோடைப் முறை 1839-ல் பொதுவாக அறிவிக்கப்பட்டது.
இந்த நாளை மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி தனது உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களுடன் கண்காட்சி நடத்தி கொண்டாட திட்டமிட்டுள்ளது.
இந்த கண்காட்சி நாளை மாலை 5 மணிக்கு சென்னையின் மூத்த புகைப்படக்கலைஞர் ஜெயானந்த கோவிந்தராஜ் திறந்துவைக்கிறார்.கண்காட்சி தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை வரை நடைபெறும், துவக்க நாளிலும்,தொடர்ந்து பள்ளி நாட்களிலும்(10-5) பார்வையாளர்கள் கண்காட்சியைக் காண இலவசமாக அனுமதிக்கப்படுவர்.
மேற்கண்ட தகவலை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் அழகானந்தம்,மற்றும் அசோக் கேடியா தெரிவித்துள்ளனர்.
-எல்.முருகராஜ்