ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சர்வதேச மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2025 அழகிப்போட்டி, விமரிசையாக நடைபெற்றது.13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்கு மட்டும் நடத்தப்படும் இந்தப் போட்டி,இளம் தலைமுறையின் திறமை, தன்னம்பிக்கை, அழகு ஆகியவற்றை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துகிறது.
நாடுகளைச் சேர்ந்த இளம் அழகியர் கலந்து கொண்ட இந்த உலகப்போட்டியின் கிரீடத்தை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த லோரெனா ரூய்ஸ் வென்றார்.கேரளாவைச் சேர்ந்த காஸியா லிஸ் மெல்ப் இரண்டாம் இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
போட்டியின் தேசிய ஆடை சுற்றில், லோரெனா தனது நாட்டின் பாரம்பரியமான உடையில் தோற்றம் தந்தார்.இறுதிப் போட்டியில் கேள்வி-பதில் சுற்றிலும், தன்னுடைய தன்னம்பிக்கை, ஆளுமை, சமூகப்பற்றை வெளிப்படுத்திய லோரெனா வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற மகுடம் சூடிக்கொள்ளும் போது வழக்கமாக பட்டம் சூடிக்கொள்ளும் அழகிகள் போலவே அழுது ஆனந்த கணணீர் வடித்தார்.
இந்தப் போட்டியை இந்தியாவின் கிளாமண்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் நடத்தியது.போட்டி நிறைவில்,வரும் அக்டோபர் 2025-இல் மீண்டும் இந்தியாவில், பெருமையாக மிஸ் டீன் யுனிவர்ஸ் (Miss Teen Universe 2025) போட்டியும் நடத்தப்பட உள்ளது. இதில் 75-க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து அழகியர்கள் பங்கேற்க உள்ளனர்.