sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பொக்கிஷம்

/

உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் 'கேமல் மில்க்'...

/

உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் 'கேமல் மில்க்'...

உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் 'கேமல் மில்க்'...

உலகம் முழுவதும் பிரபலமாகிவரும் 'கேமல் மில்க்'...

1


PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 01, 2025 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமக்கு தெரிந்து எல்லாம் பசும்பால்,மகாத்தமா சாப்பிட்டதால் ஆட்டுப் பால்,அதிகம் காபி டீ போட கடைகளில் பயன்படுத்தும் எருமைப்பால் எப்போதாவது மருத்துவ பயன்பாட்டுக்கு என்று செய்திகளில் அடிபடும் கழுதைப்பால் மட்டுமே.Image 1451909ஆனால் இப்போக கேமல் மில்க் அதுதாங்க ஒட்டகப்பால் மிகவும் பிரபலமாகிவருகிறது.நமது நாட்டில் ரொம்ப நாட்களாகவே ராஜஸ்தான் போன்ற பாலைவனப்பகுதிகளில் இந்தப் பால் பயன்படுத்திவருகின்றனர் ஆனால் அது அவர்கள் அளவிலயே இருந்து வருகிறது.Image 1451910ஆனால் அதன் முக்கியத்துவம் மட்டும் மகத்துவம் குபீர் என அதிகரித்ததால் இப்போது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, ஆசியாவின் பாலைவனப் பகுதிகளில் ஒட்டக வளர்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.இது ஒரு அருமையான ஊட்டச்சத்து பானமாக தற்போது மதிக்கப்படுகிறது. இது கேமல் மில்க் என்ற பெயரில் உலகம் முழுவதும் ஆரோக்கிய ஆர்வலர்களையும் கவர்ந்துவருகிறது.Image 1451911லேக்டோஸ் குறைவாக உள்ளது,,நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்,சர்க்கரை நிலையை கட்டுப்படுத்துகிறது(இது ஒன்று போதுமே சர்க்கரை நோயுள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க),இரும்புச் சத்து,கால்சியம் அதிகமாக இருக்கிறது இது எலும்பை உறுதியாக்குகிறது என்று கேமல் மில்க் பலன்களை சொல்லிக் கொண்டே போகின்றனர்.,ஆனால் செரிமானம் எப்படி இருக்கும் என்பது பற்றி சொல்லவில்லை.

உலகம் முழுவதும் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கலாச்சாரம் பெருகிவருவதாலும்,நவீன வாழ்க்கை முறையில் இயற்கை உணவுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதும் கேமல் மில்க்கிற்கு முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.

இப்போது சில நாடுகள் ஒரு படி மேலே போய் கேமல் மில்க்கால் தயாரிக்கப்பட்ட ஐஸ்கிரீம்,சாக்லெட்,பவுடர் பானங்களை தயாரித்து வருகின்றனர் அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் தனி சந்தையே உருவாகிவருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

சுற்றுச்சுழலை கெடுக்காமல் மேயக்கூடியதும்,குறைந்த நீரில் அதிக காலம் வாழக்கூடியதுமான ஒட்டகத்தை வளர்ப்பதிலும் மேய்ப்பதிலும் சிரமம் அதிகம் இல்லை என்பதால் ஆப்பிரிக்கா நாடுகள் ஒட்டக வளர்ப்பில் நிறைய அக்கறை காட்டிவருகின்றன.

இத்தனை நன்மைகள் இருக்கின்றன என்பதை அறியாமல் எளிதாக கிடைக்கிறது என்பதால் ராஜஸ்தான் பகுதிகளில் நம்மவர்கள் நீண்ட காலமாக கேமல் மில்க் பயன்படுத்தியே வருகின்றனர்,இனி இது நாடு முழுவதும் பரவலாகும்.






      Dinamalar
      Follow us