
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.
1. கடந்த 2024 - 25ஆம் நிதியாண்டில், அதிகப் பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள மாநிலங்களின் பட்டியலில், எந்த மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது?
அ. ஆந்திரப்பிரதேசம்
ஆ. மகாராஷ்டிரம்
இ. தமிழ்நாடு
ஈ. மத்தியப்பிரதேசம்
2. உலகின் முன்னணி கல்வி நிறுவனமான மேற்கு ஆஸ்திரேலிய பல்கலை, நம் நாட்டின் எந்த இரு நகரங்களில் தன் பல்கலையை நிறுவுகிறது?
அ. கோல்கட்டா, பெங்களூரூ
ஆ. ஐதராபாத், சென்னை
இ. சென்னை, மும்பை
ஈ. மும்பை, டில்லி
3. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாகத் தொடங்கப்பட உள்ள, 'விக்ஷித் பாரத்' ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில், வேலை நாட்கள் எத்தனையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது?
அ. 100
ஆ. 125
இ. 150
ஈ. 90
4. மத்திய தகவல் ஆணையராகப் புதிதாகப் பதவியேற்று உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி யார்?
அ. ராஜ் மோகன்
ஆ. ரஞ்சித்குமார்
இ. சிவராஜ் குப்தா
ஈ. ராஜ்குமார் கோயல்
5. இந்தியாவில், கிரிப்டோ கரன்சிகள் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், அந்த வர்த்தகத்தில் எந்த மாநிலம் முதலிடத்தில் இருப்பது, காயின் ஸ்விட்ச் இந்தியா நிறுவனத்தின் தரவுகளிலிருந்து தெரியவந்துள்ளது?
அ. உத்தரப்பிரதேசம்
ஆ. தமிழ்நாடு
இ. கேரளம்
ஈ. மேற்குவங்கம்
6. ஆமதாபாத்தில் நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 55 கிலோ பிரிவில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை?
அ. சாக்ஷி மாலிக்
ஆ. கீதா போகத்
இ. அன்டிம் பங்கல்
ஈ. அன்ஷு மாலிக்
விடைகள்: 1. இ, 2. இ, 3. ஆ, 4. ஈ, 5. அ, 6. இ.

