sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்?

குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்?

குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்பட என்ன காரணம்?


PUBLISHED ON : டிச 15, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 15, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிர்காலத்தில் உடலின் வெப்பத்தை சீராக வைப்பதற்காக ரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது, இது, இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதய நோய் பாதிப்பு இருந்தால், இந்த கூடுதல் அழுத்தம், மாரடைப்புக்கு வழிவகுக்கும். வழக்கத்தை விட அதிகமான வேலைப்பளு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பும் இதய பாதிப்பை அதிகரிக்கும்.

உடலின் வெப்பநிலை குறையும் போது, அது பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, ரத்த உறைவும் ஏற்படும். இவை இரண்டும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். ரத்த நாளங்களில் அடைப்பு இருந்தால், இந்த ரத்த உறைவு, இதயத்திற்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கிறது, இதன் காரணமாகவும் மாரடைப்புஏற்படுகிறது.

இதுதவிர, குளிர்காலங்களில்உடற்பயிற்சி செய்யாதது, துரித,கொழுப்புச் சத்து நிறைந்த, பொரித்த, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதோடு, இதய நோய் அபாயத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

சுவாச நோய்கள் உடலில் வீக்கத்தை அதிகரித்து இதயத்தில்கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.இதனால், குளிர்காலத்தில் ஏற்படும் காய்ச்சல், சளி தொற்றுகள், இதய பாதிப்பு இருந்தால் மேலும் மோசமாக்கலாம்.

குளிர்காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவது, வெப்பமூட்டும் சாதனங்கள் மூலம் உடல் சூட்டை சமநிலையில் வைத்திருப்பதுமிகவும் அவசியம். எப்போதும் கதகதப்பான சூழலில் இருப்பவர்கள், குளிரில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை இந்த நேரத்தில அதிகம் சாப்பிட வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ரத்த அழுத்தம், கொழுப்பு இவற்றை கட்டுக்குள் வைப்பதோடு, சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நடைபயிற்சி, யோகா செய்யலாம். குளிர் காலத்தில் அதீத உடல் செயல்பாடு, இதயத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உடற்பயிற்சி செய்வதற்கு முன், 'வார்ம் -அப்' செய்வது அவசியம்.

சிகரெட், மது அருந்துவது உடலின் நீர்ச்சத்தைக் குறைக்கும்;ரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும், இவை இரண்டும் மாரடைப்பிற்கு முக்கிய காரணிகள். மன அழுத்தம் இல்லாமல் இருப்பது எல்லாவற்றையும் விட முக்கியம். மனதை ஒரு நிலைப்படுத்த சுவாசப் பயிற்சி, தியானம் முறையாக தினமும் செய்யலாம்.



டாக்டர் அருண் கல்யாணசுந்தரம்

முதன்மை இதய நோய் நிபுணர்,புரோமெட் மருத்துவமனை,

சென்னை.94507 94507contact@promedhospital.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us