sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/மூளைக்கு தவறான சமிக்ஞை தரும் ஸ்கிரீன் டைம்!

மூளைக்கு தவறான சமிக்ஞை தரும் ஸ்கிரீன் டைம்!

மூளைக்கு தவறான சமிக்ஞை தரும் ஸ்கிரீன் டைம்!


PUBLISHED ON : நவ 30, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 30, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், 'இயர் பட், ஹெட் செட்' அணிந்து கேட்பது மிகவும் குறைவு தான். ஆனால், எல்லா நேரமும் சமூக வலைதளங்களை பார்ப்பதால், 'ஸ்கிரீன் டைம்' தான் அவர்களை பொருத்தவரை அதிகம்.

வயதானால் இயல்பாக துாங்க முடிவதில்லை. அதனால் தான் மொபைல் போன் பார்க்கிறோம் என்பர். மொபைல் போன் அதிக நேரம் பார்ப்பதால் தான் துாக்கமின்மை ஏற்படுகிறது. துாக்கமின்மையும், மொபைல் போனும் ஒன்றுக்கொன்று தொடர்புஉடையவை.

இரவு நேரத்தில் அரை மணி நேரம் மொபைல் போன் பார்த்தாலும், துாக்கத்தை வரவழைக்கச் சுரக்கும் 'மொலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்காது. சில சமயங்களில் தேவையை விட மிகக் குறைவாக சுரக்கும். இது பகலா, இரவா; இவரை துாங்க வைக்க வேண்டுமா, வேண்டாமா என்ற ரீதியில் மூளைக்கு குழப்ப மான சமிக்ஞை செல்லும்.

இது துாங்கும் நேரம் தான் என்பதை அறிவுறுத்தி, துாங்க முயற்சி செய்தாலும், துாக்கம் வருவதற்கு வெகு நேரமாகும்.

பிணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், துாங்குவதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன் மொபைல் போன் பார்க்காமல் இருப்பது, ஆழ்ந்த எட்டு மணி நேர துாக்கத்திற்கு நிச்சயம் உதவும்.

டாக்டர் கார்த்திக் மாதேஷ் ஆர்,இயக்குநர், காது, மூக்கு தொண்டை பிரிவு,சிம்ஸ் மருத்துவமனை, சென்னைபோன்: 94009 33973மெயில்: karthikmadesh@kotmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us