sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

வாராவாரம்

/

நலம்

/

கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தலாம்

/

கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தலாம்

கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தலாம்

கொழுப்பு கல்லீரல் நோயை குணப்படுத்தலாம்


PUBLISHED ON : மார் 22, 2026

Google News

PUBLISHED ON : மார் 22, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லீரல் செல்களில் 5 முதல் 10 சதவீதத்திற்கு மேல் கொழுப்பு தேங்கும் போது கொழுப்பு கல்லீரல் நோய் (பேட்டி லிவர்) ஏற்படுகிறது. இது 'ஹெபடிக் ஸ்டீடோசிஸ்' எனப்படுகிறது.

மது அருந்தாதவர்களுக்கு உடல்பருமன், நீரிழிவு, உயர் கொலஸ்ட்ரால் ஆகியவற்றால் ஏற்படுவது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய். இதில் கல்லீரல் வீக்கம் மற்றும் வடு ஏற்படும்.

உடல் பருமன், குறிப்பாக வயிற்றுப் பகுதி கொழுப்பு, டைப் 2 நீரிழிவு நோய், இன்சுலின் எதிர்ப்பு உயர் ட்ரைகிளிசரைடு, உயர் கொலஸ்ட்ரால், அதிக சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிரெஞ்சு பிரைஸ், சோடா எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவையும் காரணங்களாக உள்ளன.

இந்தியாவில் 5 முதல் 30 சதவீதம் பேரை பாதிக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோய் ஆண்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம்.

அறிகுறிகள் என்ன

ஆரம்ப நிலையில் சிலருக்கு அதிக சோர்வு, பலவீனம் இருக்கும். வலது வயிற்று மேல் பகுதியில் லேசான வலி அல்லது அசவுகரியம், எடை அதிகரித்தல், மஞ்சள் காமாலை (தோல், கண்கள் மஞ்சள் நிறமாதல்), வயிறு வீக்கம், கால், கணுக்கால் வீக்கம், அரிப்பு, எடையிழப்பு, ரத்தநாளம் விரிவடைதல் வரலாம்.

கண்டறிவது எப்படி

ரத்தப்பரிசோதனை (லிவர் என்சைம்கள் - ஏ.எல்.டி., ஏ.எஸ்.டி., உயர்வு), அல்ட்ராசவுண்ட், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையில் கல்லீரலின் அளவு தெரியும். தேவைப்பட்டால் பைப்ரோஸ்கேன் அல்லது கல்லீரல் பயாப்ஸி செய்யலாம்.

சிகிச்சை மற்றும் தடுப்பு

இதற்கென குறிப்பிட்ட மருந்து இல்லை; வாழ்க்கை முறை மாற்றமே சிறந்த சிகிச்சை. உடல் எடையில் 5 முதல் 10 சதவீத அளவு குறைத்தால் கொழுப்பு கணிசமாகக் குறையும். காய்கறி, பழங்கள், முழு தானியங்கள், மீன், கோழி, பயறு வகைகள் சார்ந்த புரத உணவு, ஆரோக்கிய கொழுப்புள்ள ஆலிவ் எண்ணெய், அவகாடோ சாப்பிட வேண்டும். சர்க்கரை, பொரித்த உணவு, சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, ஏரோபிக் பயிற்சி செய்ய வேண்டும். மதுவை தவிர்க்கலாம். நீரிழிவு, கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க வேண்டும்.

பாதிப்பு அதிகரித்தால் சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம். கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வரை தேவைப்படும். தவறாமல் உடல்நலப் பரிசோதனை செய்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்.

- டாக்டர் விக்னேஷ் மணி

ப்ரீதி மருத்துவமனை மதுரை






      Dinamalar
      Follow us