பிளாக் செய்த செல்களை அன்-பிளாக் செய்யும் கேன்சர் சிகிச்சை!
பிளாக் செய்த செல்களை அன்-பிளாக் செய்யும் கேன்சர் சிகிச்சை!
PUBLISHED ON : ஆக 24, 2025

கடந்த 1971ல் சென்னை மருத்துவக் கல்லுாரி பேராசிரியராக இருந்த என் ஆசான் டாக்டர் கே. ராமச்சந்திரன் தான் இத்துறைக்கு என்னை அழைத்து வந்தார்.
வரும் ஆண்டுகளில் கேன்சர் பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற தொலைநோக்கு பார்வை என் பேராசிரியருக்கு அப்போதே இருந்திருக்கிறது. அதனால், 1971ம் ஆண்டு கேன்சர் கீமோதெரபி துறையை ஆரம்பித்து, என்னை கீமோதெரபி துறையின் உதவி பேராசிரியராக நியமித்தார்.
ஒரு மாதத்தில் 15 நோயாளிகள் வருவர். கேன்சர் மருந்துகளும் நான்கைந்து தான் இருந்தன. அறுவை சிகிச்சை தான் பிரதானம். அடுத்ததாக ரேடியேஷன் எனப்படும் கதிரியக்க சிகிச்சை தருவோம்.
ஆரம்ப நிலையில் உள்ள கேன்சரை அறுவை சிகிச்சை, ரேடியேஷன் உதவியுடன் குணப்படுத்த முடிந்தது.
குறிப்பாக மார்பக கேன்சர். 70ம் ஆண்டில் 100 பேரை பரிசோதித்தால், 18 பேருக்கு மார்பக கேன்சர் இருக்கும்.
கடந்த 2020ல், 100 பேரில் 50 பேருக்கு மார்பக கேன்சர் இருக்கிறது.
அதிகரிக்க என்ன காரணம்?
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், பெரும்பாலும் வேக வைத்து சாப்பிட்டனர். இன்று பதப்படுத்திய, துரித உணவுடன் கலப்படமும் அதிகமாகி விட்டது. அசைவ உணவுகள் அதிகம் உண்பது இன்னொரு காரணம்.
முன் காலத்தை போல ஏழெட்டு குழந்தைகள் பெறாமல் ஓரிரு குழந்தைகள் பெறுவது, தாய்ப்பால் தராதது சில காரணிகள்.
முதல் மாதவிடாய் ஆரம்பித்ததில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 30 வயதிற்கு மேல் முதல் குழந்தை பெறு ம் பெண்களுக்கு மார்பக கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம்.
தாமதமான முதல் கர்ப்பம், ஒன்றிரண்டு குழந்தைகள் மட்டுமே பெறுவது, ஐந்தாறு குழந்தைகள் பெற்று அதிக ஆண்டுகள் தாய்ப் பால் கொடு ப்பதால் மார்பக கேன்சர் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.
ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்று நான்கு ஆண்டுகள் தாய்ப்பால் கொடுத்தால் கூட, மொத்த கால அளவு குறைவு என்பதால் மார்பக கேன்சர் வரும் வாய்ப்பு அதிகம்.
மார்பக கேன்சருக்கு காரணம் பெண் தன்மையுள்ள ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன். இது கர்ப்பப்பை அருகில் உள்ள சினைப்பையில் சுரக்கிறது. அதனு டைய துாண்டுதலால் தான் மார்பகங்கள் வளர்கின்றன. இயல்புக்கு அதிகமாக துாண்டும் போது கேன்சர் வருகிறது.
கொழுப்பு செல்களிலும் ஈஸ்ட்ரோஜென் சுரக் கும். உடல் பருமன் அதிகம் இருந்தால், கொழுப்பு செல்கள் அதிகம் இருக்கும். ஈஸ்ட்ரோஜென் அதிகம் சுரக்கும் போது கேன்சர் வரும்.
மரபியல் காரணிகளால் வரும் 10 சதவீத கேன்சரை, மரபணு பரிசோதனை வாயிலாக முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ஸ்கிரீனிங்
40 வயதிற்கு மேல் எக்ஸ்-ரே மேமோகிராம், எம்.ஆர்.ஐ., அல்ட்ரா சவுண்டு என்று மார்பக கேன்சருக்கான பரிசோதனை செய்வதற்கு பலமுறைகள் உள்ளன. சிறந்த முறை என்பது எக்ஸ்-ரே மேமோகிராம் தான்.
சிகிச்சை
கடந்த 25 ஆண்டுகளாக கீமோ சிகிச்சை செய்வதில் இருந்து விலகி, எந்த மரபணுவால் கேன்சர் வந்தது என்பதை அறிந்து, அதை தாக்கி அழிக்கும் விதமாக 'டார்கெட்டெட் தெரபி' சிகிச்சை செய்கிறோம். இதனால் குணப் படுத்தவே முடியாது என்று இருந்த லுகீமியா போன்ற பல கேன்சர்களை குணப்படுத்த முடிகிறது.
அடுத்தது, இம்மியூனோதெரபி. பல காரணங் களால் கேன்சர் உண் டாகும் போது, கேன்சர் திசுக்கள் சில புரதங்களை உருவாக்கி நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை செயல்படவிடாமல் பிளாக் செய்கிறது.
புதிதாக வந்திருக்கும் இச்சிகிச்சை, பிளாக் செய்த நோய் எதிர்ப்பு செல்களை 'அன் பிளாக்' செய்து செயல்படாமல் இருந்த டி-செல்களை செயல்பட வைக்கிறது.
கேன்சர் செல்களை அழிக்கிறது. நம்முடைய எதிர்ப்பு சக்தியை 'பூஸ்ட்' செய்து கேன்சர் செல்களை அழிப்பது புதிய சிகிச்சை. பெரும்பாலான கேன்சருக்கு இந்த இம்மினோ தெரபி சிகிச்சை வந்து விட்டது.
பேராசிரியர் டாக்டர் எஸ். சுப்ரமணியன், கேன்சர் மருந்தியல் சிறப்பு மருத்துவர், தலைவர், விஎஸ் மருத்துவக் குழுமம், சென்னை 90211 23000care@vshospitals.com