
நான் யாரு; நான் எங்கே வசிக்கிறேன்; என்ன பண்றேன்? - இதைவிட, என் குணத்தை நீங்க தெரிஞ்சுக்கணும்!
என் தொழிலுக்கு ஒருநாள் விடுமுறை தந்துட்டு திரையரங்கம் போயிருந்தேன்; அங்கே ஒருத்தன் என்கிட்டே அநாகரிகமா நடந்துக்கிட்டான். அவன் கன்னத்துல, 'பளார்...'னு அறை விட்டேன்; ஏன்னா... நான் தன்மானம் உள்ள பெண்!
என்கிட்டே மிருகத்தனமா நடந்துக்கிட்டதும் இல்லாம, காசு தராம ஏமாத்த நினைச்ச ரவுடியோட தங்க சங்கிலியை உருவிட்டு வந்தேன்; ஏன்னா, நான் எவனுக்கும் இலவசம் கிடையாது!
இங்கிருந்து வெளியேற விரும்புற பெண்ணுக்கு பணத்தை கொடுத்து, 'குடும்பமும், சமூகமும் ஏத்துக்க மறுத்தா, தற்கொலை முயற்சி எடுக்காம மறுபடியும் கத்தியவாடி வந்துரு; இங்கே உன் கண்ணியத்துக்கு நான் பொறுப்பு'ன்னு சொல்லி அனுப்புறேன்; ஏன்னா... நான் கத்தியவாடியோட தலைவி!
'கத்தியவாடிக்கு பக்கத்துல பள்ளிக்கூடம் இருந்தா உருப்படாது'ன்னு சொன்ன பள்ளி முதல்வர்கிட்டே, 'பள்ளிக்கு பக்கத்துல கத்தியவாடி இருக்குறதால எங்க குழந்தைங்க உருப்படும்'னு பேசி, எங்க பசங்களை பள்ளியில சேர்த்திருக்கேன்; ஏன்னா, அந்த குழந்தைங்க எல்லாரும் என்னை 'அம்மா...'ன்னு கூப்பிடுறாங்க!
நான் கங்குபாய்; பாலியல் தொழிலாளி!
படம்: கங்குபாய் கத்தியவாடி (ஹிந்தி)