
ஜிம்மியோட குடும்பமும் என் குடும்ப மும் எங்களுக்கு திருமணம் செஞ்சு வைக்கிறதுல ஆர்வமா இருந்தாங்க!
அதுக்கான முதல்படியா நானும் ஜிம்மியும் ஓர் உணவகத்துல சந்திச்சு பேசினோம். முதல் சந்திப்புக்கு பிறகு எங்க அடுத்தடுத்த சந்திப்புகளும், பகிர்தல்களும் அதிகமாச்சு. ஜிம்மியை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.
இதற்கிடையில, நித்யாவை தான் சந்திச்சதை ஜிம்மி தயக்கத்தோட என்கிட்டே சொன்னான்; அந்த தயக்கத்துக்கு காரணம், நித்யா அவனோட முன்னாள் காதலி!
'இதுல என்ன இருக்கு ஜிம்மி; நீ போய் சகஜமா பேசு'ன்னு நான் சொன்னேன். நாட்கள் போகப் போக ஜிம்மியோட உணர்வுகள்ல பெரும் மாற்றத்தை நான் உணர்ந்தேன்! ஒருநாள்...
'ஜிம்மி... நம்ம உறவை இனி நாம எப்படி எடுத்துட்டுப் போறது; ஒரு தெளிவான முடிவு சொல்லு!'
'தெரியலை பிடா; என் மனசுல தோணுறதை என்னால தெளிவா சொல்ல முடியலை; என்னை மன்னிச்சுடு!'
'இதோபார் ஜிம்மி... உன் மனசு எதை விரும்புதோ அதை செய்; இதனால என் மனசு வலிக்குமேன்னு எல்லாம் யோசிக்காதே!'
'அப்போ... உனக்கு இது வலிக்காதா?'
'வலிக்கும்... அதை நான் உண்மையா ஏத்துக்குவேன்!'
நான் இப்படி சொன்னதும் ஜிம்மி பார்வையால கேட்டான்; 'இப்படி நேசிக்க எங்கே கத்துக்கிட்டே?'
நானும் பார்வையாலேயே அவன்கிட்டே சொன்னேன்...
'நேசிக்கிறது மூலமாத்தான் நேசிக்க கத்துக்க முடியும்!'
படம்: இண்டிக்காக்கொரு பிரேமம் உண்டாயிருன்னு (மலையாளம்)