
'யுவர் ஹானர்... நான் ஒரு குற்றவாளி!'
அடித்து துன்புறுத்திய தன் கணவன் மேல என் சகோதரி சவுமியா வழக்கு தொடுத்திருந்தா. நீதிமன்ற விசாரணையில ஷைலி ஆகிய நான் நீதிபதிகிட்டே இப்படி சொன்னேன்.
'யுவர் ஹானர்... என் அம்மாவை அடித்து துன்புறுத்திய என் அப்பா மட்டுமே அவங்க இறக்க காரணமில்லை. அதை கண்டும் காணாததுமா இருந்த நானும் குற்றவாளி தான். 'காவல்துறைகிட்ட உண்மையை சொல்லாதே'ன்னு சவுமியாவை நான் மவுனமாக்கியிருக்கக் கூடாது; அம்மாவுக்கு ஆதரவா இருந்திருக்கணும்.
'குடும்ப வன்முறையால பாதிக்கப்படுற பெண்கள் இதைப்பற்றி வெளியில பேசுறதில்லை; குடும்பத்துக்கு எதிரா முடிவெடுக்க பயப்படுறாங்க; ஆதரவில்லாத சூழ்நிலையால சட்ட போராட்டம் செய்யும் மனவுறுதியை இழக்குறாங்க. ஆனா என் சகோதரி துணிச்சலோட போராடுறா. அவளை நினைச்சு பெருமைப்படுறேன்; அவளுக்கு ஆதரவா இருப்பேன்.'
'உலகளவுல 15 - 49 வயதுள்ள பெண்கள்ல மூன்றில் ஒருவர் குடும்ப வன்முறைக்கு ஆளாகுறாங்க. குடும்ப வன்முறையால ஒரு தாய் பாதிக்கப்படுறப்போ, அதோட எதிர் விளைவுகளால குழந்தைகளின் எதிர்காலமும் சிதைச்சுடுது'ன்னு வழக்கறிஞர் சொன்ன தகவல்கள் அதிர்ச்சியை தந்தது.
இப்போ சொல்லுங்க... நீங்க குற்றவாளியா?
படம்: தோ பத்தி (ஹிந்தி)