
அது தில்லானா மோகனாம்பாள் படம் வெளியான நேரம்!
என் தாத்தா ஹிந்தி திணிப்பு எதிர்ப்பாளர். ஒருகட்டத்துல அவருக்கு உடல்நிலை மோசமாக, என் திருமணத்தை பார்க்க ஆசைப்பட்டார். பெண்ணியம் பேசின தமிழ்செல்வனை மணமகனா நான் தேர்வு பண்ணினேன். ஆனா, தாலி கட்டுறதுக்கு முன்னால அவன் சுயரூபம் தெரிஞ்சதால திருமணத்தை நிறுத்தினேன்!
'ஏய் கயல்... நீ வேலைக்கு போறதையும், என்னைவிட அதிக சம்பளம் வாங்குறதையும் ஏத்துக்கிட்டேன். நீ வரதட்சணை தராததையும் சகிச்சுக்கிட்டேன். ஆனா, படிச்சி ருக்கிற திமிர்ல நீ என்னை அசிங்கப்படுத்திட்டே'ன்னு மணமேடையில தமிழ்செல்வன் கத்தினான். அப்போ என் தாத்தா...
'அம்மாடி கயல்... உன் தாத்தாவுக்கு ஏற்கெனவே பாதி உயிர் போயிருச்சு; முதல்ல உன் கல்யாணம் நடக்கட்டும்; மற்றதை அப்புறம் பேசிக்கலாம்'னு கண்ணீர் விட்டார்.
'என்ன தாத்தா இது... ஹிந்தி திணிப்பை எதிர்த்துப் போராடுற நீங்க, இந்த அநியாயத்தை எதிர்க்க வேண்டாமா; 'நான் சாகுறதுக்குள்ளே என் பேத்தி கல்யாணத்தைப் பார்க்கணும்'னு நீங்க சொல்றதும், இந்த கல்யாணத்துக்கு என்னை சம்மதிக்கச் சொல்றதும் திணிப்பு இல்லையா?'ன்னு கேட்டேன். தாத்தாகிட்டே பதில் இல்லை.
'வீட்டுக்கு ஒரு நியாயம்; ஊருக்கு ஒரு நியாயம்'னு வாழ்ற ஆண்கள் இப்பவும் இருக்குறாங்கதானே?
படம்: ரகு தாத்தா