
நான் ஜோதி ஷர்மா; நுழைவுத் தேர்வு பயிற்சியகத்தில் ஆசிரியை!
நுழைவுத் தேர்வுக்கு தயாராகுற மாணவர்களுக்கான கருத்தரங்குல கலந்துக்க என் பெயரை பதிவு பண்ணினப்போ சின்ஹா மேடம் கேட்டாங்க...
'கூடுதல் வேலை பார்த்து பதவி உயர்வு வாங்க இது பள்ளிக்கூடம் இல்லை ஜோதி மேடம்; சாதாரண கோச்சிங் சென்டர். இதே கணக்கு, இயற்பியல் பாடத்தைதான் கடைசிவரைக்கும் சொல்லித்தர போறீங்க. இதுல இந்த கருத்தரங்கு எல்லாம் எதுக்கு?'
'சின்ஹா மேடம்... நீங்க ஏன் ஆசிரியையா இருக்கீங்க?'
'ஏன்னா... எனக்கு சம்பளம் தர்றாங்க; ஆமா... நீங்க ஏன் ஆசிரியையா இருக்கீங்க ஜோதி மேடம்?'
'நுழைவுத் தேர்வுக்கு தயாராகுற மாணவர்களுக்கு கருத்தரங்கு உதவும்னா, அவங்களுக்கு பயிற்சி தர்ற எனக்கும் அந்த கருத்தரங்கு உதவும். நான் கத்துக்கிறதுக்காக ஆசிரியையா இருக்குறேன்!'
அந்த ஆண்டு, 'சிறந்த ஆசிரியை' விருது எனக்கு கிடைச்சது. 'கலர் கலரா புடவை கட்டி, மேக்கப் போட்டு, மாணவர்களோட ஓட்டு வாங்கி விருது வாங்கிட்டாங்க'ன்னு சில ஆசிரியர்கள் கிசுகிசுத்தாங்க! விருது வாங்கினதும், 'எனக்கு மாணவ சமூகத்தை ஆரோக்கியமா உருவாக்குறதுல தான் சந்தோஷம்'னு சொல்லிட்டு மேடையில இருந்து நான் இறங்கினேன். அப்போ, கூட்டத்துல இருந்து ஒரு மாணவியோட குரல்...
'ஜோதி மேடம்... வீ லவ் யூ!'
படம்: ஷர்மாஜி கி பேட்டி (ஹிந்தி)