sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

அவளே சரணம்

/

இப்படித்தான் வாழ்கிறேன்!

/

இப்படித்தான் வாழ்கிறேன்!

இப்படித்தான் வாழ்கிறேன்!

இப்படித்தான் வாழ்கிறேன்!


PUBLISHED ON : நவ 03, 2024

Google News

PUBLISHED ON : நவ 03, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான்கு பக்கமும் வயல்களால் சூழப் பட்ட திருவாரூர், மன்னார்குடியின் அழ கிய மேலநாலாநல்லுார் கிராமத்தை சேர்ந்த நான் காவியா பக்கிரிசாமி. உங்க பெண்மையின் பெருமை? தென்னை மரத்துல ஏறி இளநீர் குடிப்பேன்! காவியா அனுபவிக்கிற மழைக்காலம்? ஊர் சகதிக்காடு; சிறையாக என் வீடு! விமானம் எழும்புற அழகை பார்த்திருக்கீங்களா? விமானத்துல பயணமே பண்ணியிருக்கேன்! ஐந்து நட்சத்திர உணவகம் பற்றி...? அங்கே சாப்பிட்டிருக்கேன்; ஆனா, மனசு நிறையலை! அட... யாருங்க நீங்க? இந்திய கால்பந்து வீராங்கனை!

உங்க பெண்மையின் பெருமை?

தென்னை மரத்துல ஏறி இளநீர் குடிப்பேன்!

காவியா அனுபவிக்கிற மழைக்காலம்?

ஊர் சகதிக்காடு; சிறையாக என் வீடு!

விமானம் எழும்புற அழகை பார்த்திருக்கீங்களா?

விமானத்துல பயணமே பண்ணியிருக்கேன்!

ஐந்து நட்சத்திர உணவகம் பற்றி?

அங்கே சாப்பிட்டிருக்கேன்; ஆனா, மனசு நிறையலை!

அட... யாருங்க நீங்க?

இந்திய கால்பந்து வீராங்கனை!

ஆறாம் வகுப்புல இருந்து கால்பந்து விளையாடுறேன். எங்க சுற்றுவட்டாரத்துல மைதானம் கிடையாதுங்கிறதால, கிராமத்துல பயன்படாம இருக்குற வயல்கள்தான் மைதானம். நாற்று நடும் நாட்கள்லேயும், அறுவடை காலங்கள்லேயும் பக்கத்து வயல்களுக்கு தொந்தரவா இருக்குறதால எங்க பயிற்சிக்கு தடா!

அப்போ, என் பயிற்சியாளர் வாங்கித் தந்த ஷூ முழுமையா நைந்து போற வரைக்கும் பயன்படுத்தி இருக்கேன். 'யாராவது ஒரு ஜெர்ஸி தர மாட்டாங்களா'ன்னு ஏங்கியிருக்கேன். செலவுக்கு பணம் இல்லாம அழுதிருக்கேன். இப்படி பல கஷ்டங்களை கடந்து இந்திய அணிக்காக விளையாடுற அளவுக்கு இன்னைக்கு நான் முன்னேறிட்டேன். ஆனா, 11 வயசுல நான் பார்த்த என் கிராமம், என் 21 வயசுலேயும் அப்படியே இருக்கு!

காவியாவின் கிராமம்

பிரதான சாலையோடு கிராமத்தை இணைக்கிறது மண் சாலை. விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்ட மேலநாலாநல்லுாரில் ஏறக்குறைய 15 வீடுகளே உள்ளன. காய்கறிகள், எழுதுபொருள் தேவைக்கு கூட 3 கி.மீ., தொலைவில் உள்ள சவளக்காரன் கிராமத்திற்கே செல்ல வேண்டும்.

படிப்பு விஷயத்துல நீங்க எப்படி?

'நல்லா படிச்சாதான் முன்னேற முடியும்'னு எல்லாரும் சொன்ன அறிவுரையை என் அக்கா நம்பினா! 'நல்லா விளையாடினாலும் முன்னேற முடியும்'னு நான் நம்பினேன். 'புட்பால் கிளப்' மூலமா சம்பாதிச்சு அக்காவையும் தம்பியையும் 'டிகிரி' படிக்க வைச்சேன். இப்போ நிலம் வாங்கியிருக்கேன்; சீக்கிரம் வீடு கட்டிருவேன்.

காவியாவின் அக்கா பிரபாவதி போலியோவால் இடது காலை இழந்தவர். அவரது சிரமத்தை கருத்தில் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இவரது வீட்டில் கழிப்பறை கட்டப்பட்டிருக்கிறது. அதன்பிறகே கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறைகள் முளைத்திருக்கின்றன.

உங்க பலம்?

நான் கோல் அடிக்கிறதை விட, 'உனக்கு ஏதும் அடிபடலையே'ன்னு சந்தோஷப்படும் அம்மா, அக்கா, தம்பி இருக்கிற என் குடும்பம்!






      Dinamalar
      Follow us