/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
முதலீட்டு மதிப்பை உயர்த்தும் ரசாயனங்கள் சிக்கலான கட்டமைப்புகளுக்கு தீர்வு தரும்
/
முதலீட்டு மதிப்பை உயர்த்தும் ரசாயனங்கள் சிக்கலான கட்டமைப்புகளுக்கு தீர்வு தரும்
முதலீட்டு மதிப்பை உயர்த்தும் ரசாயனங்கள் சிக்கலான கட்டமைப்புகளுக்கு தீர்வு தரும்
முதலீட்டு மதிப்பை உயர்த்தும் ரசாயனங்கள் சிக்கலான கட்டமைப்புகளுக்கு தீர்வு தரும்
ADDED : ஜன 03, 2026 05:30 AM

கட்டுமான துறையில் ரசாயனங்களின் பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப் படுகிறது. பொதுவாக, கான்கிரீட் அட்மிக்சர்கள், நீர்ப்புகா ரசாயனங்கள்,பிணைப்பு முகவர்கள், கிரவுட் மற்றும் ஆங்கர்கள், சீலன்ட்கள் மற்றும் அடேசிவ்கள் என ரசாயனங்களை வகைப்படுத்தலாம் என்கிறார், கோயம்புத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர்கள் சங்கம்(காட்சியா) செயற்குழு உறுப்பினர் கண்ணன்.
அவர் மேலும் கூறியதாவது...
இந்த வகை ரசயானங்கள் விரிசல், சுருக்கம், பிரிவடைதல் ஆகியவற்றை குறைக்கின்றன; கட்டடத்தின் ஆயுளை அதிகரிக்கின்றன. வேலை செய்யும் வசதியை மேம்படுத்தும். பிளாஸ்டிசைசர், சூப்பர் பிளாஸ்டிசைசர் கான்கிரீட்டை எளிதாக கலக்க, ஊற்ற, உறுதியாக்க உதவுகின்றன. சிக்கலான கட்டமைப்புகளிலும், தரமான கான்கிரீட் பணியை உறுதி செய்கின்றன. நல்ல முடிப்புத் தரத்தை அளிக்கின்றன.
கட்டுமான வேகத்தை அதிகரிக்கும், ஆக்சிலரேட்டர்கள் கான்கிரீட் வேகமாக உறைய உதவுகின்றன. அவசர மற்றும் குறுகிய காலத்திட்டங்களுக்கு ஏற்றவை; வேலை நேரமும், செலவும் குறைகிறது. நீர்ப்புகா ரசாயனங்கள் நீர் கசிவு, ஈரப்பதம் போன்ற பிரச்னைகளைத் தடுக்கின்றன.
அடித்தளம், தரைத்தளம், கழிப்பறை, மேல்மாடி, நீர்த்தொட்டிகள் ஆகியவற்றிற்கு இது அவசியம். இரும்புக் கம்பிகளை துரு பிடிப்பில் இருந்து பாதுகாக்கின்றன. பிணைப்பு முகவர்கள் பழைய மற்றும் புதிய கான்கிரீட்டுக்கு இடையிலான ஒட்டுதலை மேம்படுத்துகின்றன.
சல்பேட், குளோரைடு, அமிலங்கள் போன்ற ரசாயன தாக்கங்களிலிருந்து கட்டடத்தை காக்கின்றன. பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளை குறைக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

