/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படுவது ஏன்? 'காட்சியா' உறுப்பினர் விளக்கம்
/
கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படுவது ஏன்? 'காட்சியா' உறுப்பினர் விளக்கம்
கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படுவது ஏன்? 'காட்சியா' உறுப்பினர் விளக்கம்
கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படுவது ஏன்? 'காட்சியா' உறுப்பினர் விளக்கம்
ADDED : ஆக 15, 2025 09:00 PM

கட்டடங்களில் ஏற்படும் விரிசல்களை 'ஸ்டிரக்சுரல் கிராக்ஸ்', 'ஷிரின்கேஜ் கிராக்ஸ்', 'எக்ஸ்பேன்சன் கிராக்ஸ்', 'கன்ஸ்டிரக்சன் டிபெக்ட்ஸ்' என, நான்கு வகையாக பிரிக்கலாம்.
இவ்வகையான விரிசல்களுக்கான காரணங்கள் குறித்து, 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் பிரவீன் குமார் கூறியதாவது:
அடித்தள தாழ்வு, மிகுந்த சுமை அல்லது திடீரென ஏற்படும் பாரம், குறைவான கம்பி, சிமென்ட் கலவை அல்லது கான்கிரீட் அதிகம் உலர்வது, சரியான கியூரிங் இல்லாமை, வெப்பம் காரணமாக ஏற்படும் விஸ்தரிப்பு, விரிவாக்கம், கட்டுமான இணைப்பு இல்லாத கட்டட வடிவமைப்பு ஆகியன முக்கிய காரணங்களாக உள்ளன.
மோசமான வேலை நிறைவு, அளவுகோல் பிழைகள், கட்டடத்தின் தவறான பராமரிப்பு, காலப்போக்கில் ஏற்படும் இயற்கையான பழுது ஆகியனவும் காரணங்கள். விரிசல்களை சரி செய்ய, அடிப்பகுதியில் 'கிரவுட்டிங்' முறையை மேற்கொள்ள வேண்டும்.
பீம்கள், ஸ்லாப்கள், துாண்களில் கம்பியை சேர்த்தல், மறு வலிமைப்படுத்துதல் வாயிலாக கட்டுமானத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்த முடியும். ஏழு முதல், 14 நாட்கள் வரை போதிய நேரம் 'கியூரிங்' செய்தல் வேண்டும்.
சிமென்ட், தண்ணீர் பிணைப்பில் சரியான விகிதாசார முறையை கடைபிடிக்க வேண்டும். நல்ல தரமான வேலை செய்து கட்டமைப்பை சீர்திருத்துதல், அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல், விரிசல் உள்ள பகுதிகளை 'எபாக்ஸி கிரவுட்' வாயிலாக நிரப்புதல் வேண்டும்.
விரிசல் அகலம், 0.5 மி.மீ.,க்கு குறைவாக இருப்பின், பட்டி பயன்படுத்தலாம். 0.5 மி.மீ., இருப்பின் 'எபாக்ஸி இன்ஜெக்சன்' பயன் படுத்தலாம். 5 மி.மீ.,க்கு அதிகமாக இருப்பின் கட்டமைப்பு மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.