/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
கட்டுமான பொருட்கள் தரமானவையா? கண்டுபிடிப்பது எப்படி?
/
கட்டுமான பொருட்கள் தரமானவையா? கண்டுபிடிப்பது எப்படி?
கட்டுமான பொருட்கள் தரமானவையா? கண்டுபிடிப்பது எப்படி?
கட்டுமான பொருட்கள் தரமானவையா? கண்டுபிடிப்பது எப்படி?
ADDED : ஆக 08, 2025 08:41 PM

க ட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் சிமென்ட், கான்கிரீட், கம்பி, கல், மணல் ஆகியவை தரமானவையாக இருக்க வேண்டியது கட்டாயம். இந்த தரத்தைக் கண்டறிய பரிசோதனை மட்டுமே ஒரே வழி என்கிறார், கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்க இணை பொருளாளர் மகுடேஸ்வரன்.
அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது...
முக்கியமான கட்டுமான பொருளான சிமென்ட்டை, 'பைன்னெஸ்', 'கன்சிஸ் டென்ஸி', 'காம்பிரியன்சிவ்' வலிமை சோதனை செய்ய வேண்டும். கான்கிரீட்டை 'ஸ்லம்ப் டெஸ்ட்', 'கியூப் டெஸ்ட்' செய்ய வேண்டும். மணலை 'சில்ட் கன்டென்ட்', 'பாராடிகல் சைஸ்' செய்வது நல்லது.
இவை அனைத்தையும் அரசு அங்கீகாரம் பெற்ற, ஆய்வகங்களில் செய்யவேண்டும். என்.ஏ.பி.எல்., என்பது சோதனை மற்றும் அளவுத்திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியமாகும்.
இந்த வாரியத்தின் சான்று பெற்ற ஆய்வகங்களில் மட்டுமே தரமான, சரியான முடிவுகளும், பொறுப்புணர்வும் உள்ள சோதனைகள் நடத்தப்படுகின்றன. நீதிமன்றங்கள், அரசு அனுமதி உள்ளிட்ட அனைத்திற்கும் இது அங்கீகாரம் பெற்றதாக அமைகிறது.
மண் மட்டும் பார்த்து அடித்தளம் அமைத்தாலும், கான்கிரீட் தரமற்றதாக இருந்தால் வீடு நிலைத்திருக்காது. கம்பியின் 'டென்சில் ஸ்ட்ரென்த்' சரியாக இல்லாவிட்டால் ஆர்.சி.சி., நிலைத்தன்மை பாதிக்கப்படும். எனவே, மண்ணும், கட்டுமானப் பொருட்களும் இரண்டும் சோதிக்கப்பட வேண்டும்.
கட்டுமானத்திற்கு முன்பாகவே, மாதிரிப் பொருட்கள் சேகரித்து சோதனை செய்யவேண்டும். இதனால், பின்பட்ட தவறுகள், சுருண்ட கட்டமைப்புகள், கான்கிரீட் முறிவுகள் போன்றவை தவிர்க்க முடியும். ஒரு சிறிய வீடு கட்டுவதற்கான மண் பரிசோதனைக்கு ரூ.5,000 முதல், 15 ஆயிரம் மட்டுமே.
இது ஒரே முறை செலவு; ஆனால் லட்சக்கணக்கான பழுது செலவுகளைத் தவிர்க்க உதவும். இதில், 'அல்ட்ராசோனிக் பல்ஸ் வெலாசிட்டி'(யு.பி.வி.,) சோதனையானது கான்கிரீட்டில் உள்ள கிரேக் உள்ளிட்டவற்றை தேடி கண்டுபிடிக்க பயன்படுகிறது.
'கொரிசன் அனலைடசர்' சோதனை ஆர்.சி.சி.,யில் உள்ள இருப்பு கம்பியில் துரு ஏற்பட்டுள்ளதா என்பதை தெரியப்படுத்தும். இது இரண்டும் பழைய கட்டடங்களுக்கு மிகவும் அவசியம். தரமான கட்டுமானம், தரமான பொருட்கள் மற்றும் பரிசோதிக்கும் முறைகள், கட்டடத்திற்கு நீடித்த நிலைத்தன்மையை வழங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.