ஜிக்சர் 250, 250 எஸ்.எப்., பைக்குகளை திரும்ப பெறும் சுசூகி
ஜிக்சர் 250, 250 எஸ்.எப்., பைக்குகளை திரும்ப பெறும் சுசூகி
ADDED : செப் 03, 2025 08:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிக பிரேக் பேட் தேய்மானம் காரணமாக, 'சுசூகி மோட்டார்சைக்கிள்ஸ்' நிறுவனத்தின், 'ஜிக்சர் 250 மற்றும் 250 எஸ்.எப்., பைக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
அதாவது, பிப்ரவரி 2022 முதல் ஜூன் 2025க்குள் உற்பத்தியான 5,145 பைக்குகள், இப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த பைக்குகளில் வரும் பிரேக் கேலிபர்களை, இந்நிறுவனம் இலவசமாக மாற்றித் தருவதாக தெரிவித்துள்ளது. இக்காலக்கட்டத்தில் உற்பத்தியான பைக்குகளில் இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு இருந்தால், வாடிக்கையாளர்கள் விரைவில் பராமரிப்பு மையத்திற்கு சென்று சரிசெய்து கொள்ளலாம்.