சணி 'எஸ்.ஒய்.35யு., புரோ' 'பவர்ஹவுஸ்' மினி எக்ஸ்கவேட்டர்
சணி 'எஸ்.ஒய்.35யு., புரோ' 'பவர்ஹவுஸ்' மினி எக்ஸ்கவேட்டர்
UPDATED : செப் 03, 2025 08:23 AM
ADDED : செப் 03, 2025 08:17 AM

'சணி' நிறுவனம், 'எஸ்.ஒய்.35யு., புரோ' என்ற மினி எக்ஸ்கவேட்டரை அறிமுகம் செய்துள்ளது. 3.5 டன் எடை பிரிவில் வரும் இந்த எக்ஸ்கவேட்டர், உள்நாட்டு சந்தைக்கு பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த எக்ஸ்கவேட்டரில் 28 ஹெச்.பி., பவர் கொண்ட 'யான்மார்' டீசல் இன்ஜின் பயன்படுத்தப் படுகிறது. இது, எரிபொருள் செலவை குறைத்து, குழி தோண்டுவதற்கு அதிக பவர் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் உள்ள ஹைட்ராலிக் அமைப்புகளை, 5,000 மணி நேரத்திற்கு ஒரு முறை பராமரித்தால் போதும்.
![]() |
இது, தரையில் இருந்து, 3.4 மீட்டர் ஆழம் வரை குழிதோண்டும் திறன் உடையது. எடைக்கேற்ப இயங்கும் நவீன ஹைட்ராலிக்ஸ் அமைப்புகள், அதிக இடவசதி உள்ள கேபின், சஸ்பென்ஷன் சீட்கள், யூ.எஸ்.பி., வாயிலாக இயங்கும் சவுண்டு சிஸ்டம், எல்.இ.டி., லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த எக்ஸ்கவேட்டரில் உள்ளன.
இயந்திர ஓட்டுநரை பாதுகாக்க, பலமான கேபின் பிரேம், பேட்டரி துண்டிப்பு ஸ்விட்ச் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் இதில் உள்ளன. இந்த எக்ஸ்கவேட்டரில், ஆறுக்கும் அதிகமான இணைப்புகளை பொருத்திக்கொள்ள முடியும்.