தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/ 'அட்வெஞ்சர் பைக்' எதிர்பார்ப்பு அதிகரிப்பு: வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை: யமஹா

 'அட்வெஞ்சர் பைக்' எதிர்பார்ப்பு அதிகரிப்பு: வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை: யமஹா

 'அட்வெஞ்சர் பைக்' எதிர்பார்ப்பு அதிகரிப்பு: வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை: யமஹா


UPDATED : ஜூலை 22, 2026 02:04 PM

ADDED : ஜூலை 22, 2026 07:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 22, 2026 02:04 PM ADDED : ஜூலை 22, 2026 07:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யமஹா அட்வெஞ்சர் பைக் எப்போது களமிறங்கும்?


சந்தை ஆய்வுகள் மற்றும் வாடிக்கையாளர் கருத்துக்கள் அடிப்படையில், அட்வெஞ்சர் பைக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம், 'ஆர்.எக்ஸ்., 100' பைக்கை போல் நல்ல வரவேற்பு பெற்ற பழைய பைக்குகளின் மறுவருகை, புதிய பைக் மேம்பாடுகளை வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

வாடிக்கையாளர் தேவை, போட்டி விலை நிர்ணயம், உள்நாட்டு மயமாக்கல், சந்தை தயார்நிலை, வணிக வாய்ப்பு ஆகியவற்றை பொறுத்து புதிய அறிமுகங்களை தீர்மா னிப்போம்.

புதிய அறிமுகங்கள், ஏன் தாமதம்?


'சரியான நேரத்தி ல் சரியான அறிமுகம்' என்பது தான் யமஹா நிறுவனத்தின் கொள்கை. புதிய அறிமுகம் செய்வதற்கு முன், விரிவான சந்தை ஆய்வு, வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள், தரம், பாதுகாப்பு, செயல்திறன் சரிபார்ப்பு, நீண்ட கால உழைப்பு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவோம்.

வெற்றி என்பது அறிமுக வேகத்தில் இல்லை, நீண்ட கால வாடிக்கையாளர் திருப்தியில் மட்டுமே உள்ளது. அதிக அறிமுகங்களை விட, நீண்ட கால வாடிக்கையாளர் மதிப்பிற்கு அதிக முன்னுரிமை அளிக்கிறோம்.

யமஹாவிற்கு இந்தியா ஏன் முக்கியம்?


யமஹா நிறுவனத்தின் மொத்த விற்பனையில், இந்தியாவின் பங்கு 10 சதவீதம் உள்ளது. எங்களின் நீண்ட கால வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்தியா, எங்களின் முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக திகழ்கிறது. இங்கு தயாரிக்கப்படும் யமஹா வாகனங்கள், ஐரோப்பா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகி ன்றன.

முதல் மின்சார வாகன அறிமுகத்தில், கற்றுக் கொண்ட பாடம் என்ன?


வாடிக்கையாளர்கள் அடிப்படையான மின்சார வாகனத்தை தாண்டி அதிகம் எதிர்பார்க்கின்றனர். பிரீமியம் டிசைன், நம்பகத்தன் மை, ஸ்மார்ட் அம்சங்கள், சிறப்பான ஓட்டும் அனுபவம் உள்ளிட்டவை முக்கிய எதிர்பார்ப்புகளாக உள்ளன. எங்கள் மின்சார வாகனகளின் தேவை பெருநகரங்களை தாண்டி, முதல் மற்றும் இரண் டாம் நிலை நகரங்களிலும் ஏற்பட்டுள்ளது.

அடுத்த இரு ஆண்டுகளில் செய்யப்படும் அறிமுகங்கள்?


புதிய பைக் அறிமுகங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது, 580தாக உள்ள யமஹாவின் 'ப்ளூ ஸ்கொயர்' விற்பனை மையங்களை, மேலும் அதிகரிக்க உள்ளோம். வாடிக்கையாளர் ஆர்வத்தை அதிகப்படுத்த, ரேஸ் டிராக் அனுபவம், யமஹாவின் குழு பயண திட்டங்களை அதிகம் ஊக்குவிக்க முயற்சி செய்கிறோம்.

ரவிந்தர் சிங், விற்பனை பிரிவின் முதன்மை துணைத் தலைவர், யமஹா மோட்டார் இந்தியா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us