UPDATED : ஆக 27, 2025 08:21 AM
ADDED : ஆக 27, 2025 08:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஹீரோ மோட்டோகார்ப்' நிறுவனம், 'கிளாமர் 125' பைக்கை மேம் படுத்தி, 'கிளாமர் எக்ஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இது, 125 சி.சி., பிரிவில், 'க்ரூயிஸ் கன்ட்ரோல்' வசதி உள்ள ஒரே பைக் ஆகும். இந்த பைக்கின் விலை, 2,800 ரூபாய் அதிகம்.
வெளிப்புற டிசைன் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹேண்டல் பார் 30 எம்.எம்., அதிகரிப்பு, சீட் உயரம் 790 எம்.எம்.,மாக குறைப்பு, அகலமான சீட், 170 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், புதிய வெளிப்புற கிராபிக்ஸ், கருப்பு விண்ட் வைசர் ஆகியவை இதில் உள்ள மாற்றங்கள்.
![]() |
எல்.இ.டி., ஆட்டோ ஹெட் லைட், எல்.சி.டி., டிஸ்ப்ளே, ரைட் பை ஒயர் மற்றும் புளூடூத் வசதி ஆகியவை இதர அம்சங்கள். இதில், ஏ.பி.எஸ்., வசதி இல்லை. இந்த பைக் ஐந்து நிறங்களில் கிடைக்கிறது.