தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/பென்ஸ் ‘ஜி.எல்.சி., 400’ 711 கி.மீ., ரேஞ்ச், 39 அங்குல 8கே டிஸ்ப்ளே வருகை

பென்ஸ் ‘ஜி.எல்.சி., 400’ 711 கி.மீ., ரேஞ்ச், 39 அங்குல 8கே டிஸ்ப்ளே வருகை

பென்ஸ் ‘ஜி.எல்.சி., 400’ 711 கி.மீ., ரேஞ்ச், 39 அங்குல 8கே டிஸ்ப்ளே வருகை


ADDED : நவ 11, 2026 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2026 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

‘மெர்சிடிஸ் பென்ஸ்’ நிறுவனம், ‘ஜி.எல்.சி., 400’ என்ற 5-சீட்டர் மின்சார சொகுசு எஸ்.யூ.வி., காரை அறிமுகம் செய்துள்ளது. இது, உள்நாட்டில் உற்பத்தியாகும் மூன்றாவது பென்ஸ் இ.வி., காராகும்.

நீளம் 4.8 மீ உள்ள இந்த இ.வி., காரில், 94 கி.வாட்.ஹார்., ஆற்றல் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி, இரு பி.எம்.எஸ்.எம்., மோட்டார்கள், ஆல் வீல் டிரைவ் அமைப்பு, 2 – ஸ்பீட் கியர்பாக்ஸ் ஆகியவை கிடைக்கின்றன. ஒரு முழு சார்ஜில், 711 கி.மீ., நிஜ உலக ரேஞ்ச் கிடைப்பதாக இந்நிறுவனம் கூறுகிறது. 210 கி.மீ., டாப் ஸ்பீட், 100 கி.மீ., வேகத்தை எட்ட வெறும் 4.3 வினாடி எடுக்கிறது. 330 கி.வாட்., பாஸ்ட் சார்ஜரின் வாயிலாக, வெறும் 10 நிமிட சார்ஜில் 300 கி.மீ., வரை பயணம் மேற்கொள்ள முடியும். அதே, முழு சார்ஜ் செய்ய 22 நிமிடம் எடுக்கிறது.

புதிய 800 வோல்ட் மின்சார கட்டுமான தளத்தில் உற்பத்தியாகும் இந்த காரில், 914 லைட்டுகள் கொண்ட ஒளிரும் முன்புற கிரில், நட்சத்திர வடிவ டி.ஆர்.எல்., லைட்கள், ஏ.எம்.ஜி., ஸ்போர்ட்ஸ் கார் தோற்றம், 20 அங்குல அலாய் சக்கரங்கள், எந்த காரிலும் இல்லாத அளவில் 39 அங்குல பெரிய 8கே டிஸ்ப்ளே, டோல்பி அட்மோஸ் வசதியுடன் 15 ஸ்பீக்கர் 3டி சவுண்ட் சிஸ்டம், மசாஜ், வென்ட்டிலேட்டட் முன்புற சீட்கள், டூயல் ஜோன் ஏ.சி., பேனரோமிக் கிளாஸ் ரூப், வையர்லெஸ் சார்ஜிங் மற்றும் இணைப்புகள் என பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு, ஒன்பது காற்று பைகள், எட்டு கேமராக்கள், 12 சென்சார்கள், ஐந்து ரேடார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்கள் ஆகும்.

விலை ரூ. 78.5 லட்சம்



பேட்டரி | 94 கி.வாட்.ஹார்.,
மோட்டார் பவர் | 489 ஹெச்.பி.,
டார்க் | 800 எம்.எம்.,
ரேஞ்ச் | 711 கி.மீ.,
டாப் ஸ்பீடு | 210 கி.மீ.,
(0 - 100 கி.மீ.,) பிக்கப் | 4.3 வினாடி
பூட் ஸ்பேஸ் | 570 லிட்டர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us