sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

ஆளைப்பார்த்து வசூலு... 'ஆனந்தமா' வாங்கும் போலீசு!

/

ஆளைப்பார்த்து வசூலு... 'ஆனந்தமா' வாங்கும் போலீசு!

ஆளைப்பார்த்து வசூலு... 'ஆனந்தமா' வாங்கும் போலீசு!

ஆளைப்பார்த்து வசூலு... 'ஆனந்தமா' வாங்கும் போலீசு!


ADDED : ஜூலை 21, 2025 11:27 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி ருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதர் சுவாமி கோவிலுக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் செய்த பின், கோவிலுக்கு வெளியே இருந்த மரத்தின் நிழலில் அமர்ந்தனர்.

''மித்து, பூண்டி முனிசிபாலிட்டியில, தோழர் கட்சி கவுன்சிலர்கள் தான், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாதிரி நடந்துக்கிறாங்களாம்...,'' என்ற சித்ரா தொடர்ந்தாள். ''சூரியக்கட்சி நிர்வாகி தான், முனிசிபல் சேர்மனாக இருக்கிறார். இ.கம்யூ., கவுன்சிலருங்க, சேர்மனுக்கு ரொம்ப இணக்கமா இருக்காங்களாம். ஆனா, மா.கம்யூ.,வினர், நடக்கிற தப்பை, அப்பப்போ சுட்டிக் காண்பிச்சுடறாங்களாம்,''

''இப்படிதான், திருப்பூர் கார்ப்பரேஷன் சார்பில் சேகரிக்கப்படுற குப்பையை, அம்மா பாளையம் பக்கத்திலுள்ள பாறைக் குழியில கொட்ட ஆரம்பிச்சிருக்காங்க. இதுக்கு ஆரம்பத்துலயே எதிர்ப்பு தெரிவிச்சு, மா.கம்யூ., கட்சிக்காரங்க, கலெக்டர்கிட்ட மனு கொடுத்தாங்க. இது, மக்கள் மத்தியில எடுபட, சுதாரிச்ச இ.கம்யூ., கட்சிக்காரங்க, 'நாங்களும் தான் குப்பை கொட்டும் விவகாரத்துல கண்டிக்கிறோம். எங்க ஏரியாவுல குப்பை கொட்டக்கூடாதுன்னு சொல்லியிருக்கோம்,'னு சொல்லி, தெருமுழுக்க 'நோட்டீஸ்' அச்சடிச்சு ஒட்டியிருக்காங்களாம்,'' என்றாள்.

இந்த படை போதுமா! ''நோட்டீஸ் ஒட்டினால் போதுமா... செயல்பாடு என்னன்னு மக்கள் கேள்வி கேட்டால் மட்டும்தான் எல்லாம் சரியாகும்க்கா...'' என்ற மித்ரா, ''புதுப்பிக்கப்பட்ட மத்திய பஸ் ஸ்டாண்டுக்கு, திருப்பூர் குமரன் பெயரை வைக்கணும்ன்னு, பலரும் சொன்ன நிலையில, கருணாநிதி பேர வச்சுட்டாங்க. இத எதிர்க்கட்சிக்காரங்க அரசியலாக்கிய நிலைமையில, கோவில் வழி பஸ் ஸ்டாண்டுக்கு, திருப்பூர் குமரன் பேர வச்சு சமாளிச் சுட்டாங்க...'' என்றாள்.

தொடர்ந்த பேசிய சித்ரா, ''சிட்டிக்குள்ள மிலிட்டரி காலனியில, பட்டா கிடைக்காம நிறைய வீடுங்க இருக்காம். போன எலெக்ஷன்ல, நாங்க ஆட்சிக்கு வந்தா, கண்டிப்பா பட்டா வாங்கிக் கொடுப்போம்ன்னு சொன்னாங்களாம். சொன்ன மாதிரி, இடம் பார்த்து, பட்டா தர்றதுக்கான ஏற்பாடுகளை கூட செஞ்சாங்களாம். ஆனா, இதுவரைக்கும் பட்டாவை கண்ணுல காமிக்கலையாம். இப்ப சி.எம்., விசிட் கேன்சல் ஆனதால, பட்டா எப்ப கொடுப்பாங்கன்னு தெரியல,'' என்றாள்.

வசூல் ராஜாக்கள் 'பராக்!' ''ஓடக்காடு ஏரியாவுல, ஒருத்தர், கம்மி ரேட்ல துணி பிரிக்கும் மெஷின் சேல்ஸ் செய்வதாகவும், அது மூலமா பிரிக்கிற துணிகளை வாங்கி, நாங்களே வித்து கொடுக்கிறோம்ன்னு சொல்லி, சோஷியல் மீடியாவுல விளம்பரம் செஞ்சிருக்காரு. இத பார்த்து, நிறைய பேரு பணம் கட்டி மெஷின் வாங்கியிருக்காங்க. இதுல பல லட்சம் சேர்த்த ஆசாமி, சொன்னபடி மெஷின் கொடுக்கலையாம்,''

''ஒரு சிலருக்கு மெஷின் கொடுத்தும், மார்க்கெட்டிங் வசதியை செஞ்சு தரலையாம். இதனால, கொடுத்த பணத்தை திரும்பக்கேட்டு, அவரோட ஆபீசை மக்கள் முற்றுகை பண்ணியிருக்காங்க. பணத்தை வாரி சுருட்டின அவரு, 'என் ஆபீஸ்ல வேலை செஞ்ச ஒரு லேடி தான் ஏமாத்திட்டு போய்ட்டாங்க. பல்லடம் பக்கத்தில இருக்கற எனக்கு சொந்தமான நிலத்தை திண்டுக்கலை சேர்ந்த ஆளுங்கட்சிக்காரருக்கு வித்துட்டேன். அவரு இன்னும் பணம் தரல, நான் என்ன பண்றது... அப்படி, இப்படின்னு ஏதேதோ அளந்து கதை சொல்லிட்டு இருக்காராம்,'' என்றாள் சித்ரா.

''என்னமோ போங்க்கா. இப்படி தான் நெறய பேரு கிளம்பியிருக்காங்க...'' என 'உச்' கொட்டிய மித்ரா, ''நம்ம 'வாசுதேவன்' அங்கிள் நாளைக்கு வர்றதா சொன்னார். லேண்ட் சமாசாரம் பேசணும்ன்னு சொன்னீங்களாமே...'' என்றாள்.

''லேண்ட்ன்னு சொல்லவும் தான் இன்னொரு விஷயம் ஞாபகத்துக்கு வருது மித்து'' என்ற சித்ரா ''திருப்பூர் கார்ப்பரேஷன்ல வரி வசூல் செய்யற வேலைக்கு கோவையில இருந்த ஒருத்தரு கொஞ்சம் நாள் முன்னாடி தான் டிரான்ஸ்பராகி வந்திருக்காரு. பழைய பில்டிங்களுக்கு வரி சீராய்வு செய்றதுல, கலெக்ஷன் அள்றாராம். கட்டட அளவை சரி பார்த்து, இப்ப இருக்கற வரி குறைச்சலா இருக்கு; இன்னும் கொஞ்சம் அதிகமா போடணும்ன்னு சொல்லி, பீதியை கிளப்பி, 'கவனிப்பு' வாங்கின பின்னாடி, அப்படியே விட்டுடறாராம். அவரோட 'வசூல் திறமையை' பார்த்து, ரொம்ப வருஷமா அங்க இருக்கற ஸ்டாப்ஸ் கூட 'திகைச்சு' போயிருக்காங்களாம்...,'' என்றாள் மித்ரா.

டார்ச்சர் தாங்கலையாம்! ''குரூப் லீடர் டார்ச்சர் தாங்கலைன்னு, அங்கன்வாடி பணியாளர்கள் புலம்பறாங்களாம் '' என பேச்சை மாற்றிய சித்ரா, ''அங்கன்வாடி பணியாளர்களை கண்காணிக்கிறதுன்னு, குரூப் லீடர் மாதிரி ஒரு பொறுப்பை ஒரு லேடிகிட்ட கொடுத்திருக்காங்களாம். அவங்க என்னடான்னா, சக ஊழியர்களை சகட்டு மேனிக்கு மிரட்டறாங்களாம். நான் தான் உங்களுக்கு ஆபீசர். சொல்றதை கேட்கலைன்னா, வீட்டுக்கு போக வேண்டியது தான்னு சொல்றாங்களாம்,''

''அதுவுமில்லாம நான் சொல்ற மாதிரி தான் கேட்கணும்னு சொல்றாங்களாம். அவங்க மேல ஏற்கனவே, சத்து மாவு, அரிசியை முறைகேடா விற்பனை செஞ்சது தொடர்பான கம்ப்ளைன்ட் வேற இருக்காம். இருந்தாலும், பெரிய ஆபீசர்ஸ் இத கண்டுக்கிறது இல்லையாம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, அவங்க புலம்பல் அப்படின்னா. கிராம பஞ்சாயத்து நிர்வாக பொறுப்பை கவனிக்கிற பி.டி.ஓ.,ஸ் புலம்பல் வேற மாதிரி இருக்கு. பஞ்சாயத்து பிரசிடென்ட் பொறுப்புல இருக்கறப்போ, 'ஆடிட்' வேலையை கண் காணிக்கிற ஆபீசர்களுக்கு, 10 ஆயிரம் வரை படியளப்பாங்களாம். அந்த அமவுன்டை பிரசிடென்ட்களே கொடுத்துடுவாங்க போல... இப்போ என்னடான்னா, 30 ஆயிரம், 40 ஆயிரம் கேட்கிறாங்களாம். இவ்வளவு பெரிய தொகைய எங்கிருந்து கொடுக்க முடியும்ன்னு, பி.டி.ஓ.,ஸ் புலம்பி தள்றாங்களாம்....'' என்றாள் மித்ரா.

''நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்க கலெக்டர் இந்த விவகாரத்தையும் கொஞ்சம் கவனிச்சார்ன்னா பரவாயில்ல...'' என்றாள் சித்ரா.

ஆளுக்கேத்த வசூல்! ''வெ.கோவில் போலீஸ் ஸ்டேஷன்ல, கோர்ட் வழக்குல நிறைய பெட்டி கேஸ்கள் இருக்காம். அதிகபட்சமா, இதுக்கு, 1,500 ரூபாய் வரைக்கும் தான் அபராதம் போடுவாங்களாம். அந்த வழக்கை டீல் பண்ற ஒரு போலீஸ்காரர், ஆளுக்கேத்த மாதிரி, 'ஆனந்தமா' 5 ஆயிரம் வரை வசூல் பண்ணிடறாராம்,'' என்றாள் மித்ரா.

''காங்கயத்துல, 'சிவ'மான எல்.ஐ.சி., ஏஜன்ட் ஒருத்தரு இருக்காராம். இவரு என்னடான்னா, துப்பாக்கி லைசென்ஸ் வாங்கித்தரேன்னு, போலீஸ் பேர சொல்லி செமையா கல்லா கட்றாராம்,'' என்றாள் சித்ரா.

''நானும் ஒரு போலீஸ் மேட்டர் சொல்றேன். அவிநாசி பக்கத்துல இருக்கற ஸ்டேஷன்ல கருக்கம்பாளையத்துல இருந்து முதலிபாளையம் நால்ரோடு வழியா போற ரோட்ல, பைக்ல வந்த ரெண்டு பேரு, ஆடு திருடிட்டு போயிருக்காங்க. இதுதொடர்பான 'சிசிடிவி' ஆதாரத்தை காண்பிச்சும், போலீஸ்காரங்க ஆக்ஷன் எடுக்க மாட்டேங்கறாங்களாம்'' என்றாள் சித்ரா.

நேருக்கு நேர் 'நோ' ''சிட்டியில சமீபத்தில 'பில்ட் எக்ஸ்போ' நடந்தது. அதோட துவக்க விழாவில, எம்.எல்.ஏ., - மேயர் கலந்துகிட்டாங்க. ஆனா, நிகழ்ச்சி முடியும் வரை இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.,வும், மேயரும் நேருக்கு நேர் முகம் கொடுத்து பேசல. எக்ஸ்போ மலரை எம்.எல்.ஏ., வெளியிட, மேயர் வாங்கி கொண்ட போதும், போட்டோ எடுக்கும் போதும் கூட இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. கட்சியில் எதிரெதிர் கோஷ்டியாக இருந்தாலும், பொது நிகழ்ச்சி என வரும்போது, மேடை நாகரீகம் கருதியாவது நேருக்குநேர் பார்த்துக் கொள்ளாமல் அப்படி என்ன வெறுப்பு இருக்குதுன்னு தெரியல,' கட்சிக்காரங்களே புலம்பறாங்களாம்,'' சொன்னாள் மித்ரா.

''அட... என்னதான் சண்டைன்னாலும், பொது வெளியில அத காட்டக்கூடாதில்ல...'' ஆதங்கப்பட்ட சித்ரா, ''காங்கயத்தில, குட்டி அதிகாரி ஒருத்தரு மக்கள்கிட்டயும் சரி, கூட வேல செய்ற போலீஸ்கிட்டயும் சரி, ஒருமையில் தான் பேசுவாராம். ஏற்கனவே, அவர் மேல பல பெட்டிஷன் போயும் சபை நாகரீகம் கூட தெரியாத அளவுக்கு நடந்துட்டு இருக்காரு. அவரின் நடவடிக்கையை பார்த்து மக்கள் மட்டுமல்லாம, போலீஸ்காரங்களும் 'செம காண்டுல' இருக்காங்களாம்...'' என்றாள்.

அப்போது, மித்ராவின் போனிலிருந்து 'என்ன கபிலா இதெல்லாம்...' என ரிங்டோன் ஒலித்தது. 'ஆன்' செய்து, ''சாரி ராங் நம்பர்,'' என அணைத்தாள்.

அதனை கேட்டு சிரித்து கொண்டே சித்ரா, ''மித்து, ரத்த காயத்துடன் டியூட்டிக்கு திரும்பிய போலீசார் பற்றி தெரியுமா?'' என்றாள்.

''சொல்லுங்க கேக்கறேன்...''

'பேன்டேஜ்' போலீஸ் ''சிட்டி கன்ட்ரோல் ரூம் இன்சார்ஜ் ஆபீசர் ஒருத்தர், எல்லா போலீசையும் டார்ச்சர் பண்றாராம். டியூட்டிக்கு ஒரு நிமிஷம் லேட்டானாலும், ஆப்சென்ட் போட்டு, சி.எல்., லீவில் கழித்து விடுவதாக மிரட்டுகிறாராம். இதனால, அந்த டைமுக்கு போயிடணும்னு, பறந்து கட்டிட்டு போறாங்க. அப்படி தான் ரெண்டு நாளைக்கு முன்னாடி, ஒரு போலீஸ்காரர், அவசரத்தில் போகும் போது, ஏக்ஸிடென்ட் ஆகி, ரத்த காயத்துடன் டியூட்டிக்கு போயிருக்கார். அதோட, அவரோட நிலைமைய போட்டோ எடுத்தும் அனுப்பிச்சிருக்கார். ஆனா, அத கொஞ்சம்கூட கண்டுக்காம கல்நெஞ்சக்காரரா நடந்துட்டு வர்றாரு. இதேமாதிரி இருந்தால், நாளைக்கு பெரிய பிரச்னையாகி, அனைத்து ைஹயர் ஆபீசர் தலையும் உருளத்தான் போகுது,'' விளக்கினாள் சித்ரா .

''கலெக்டர் ஆபீசில வாராவாரம் நடக்குற ஜி.டி.பி.,யில, எழுத படிக்க தெரியாத, விவரம் தெரியாத பலரும், வீட்டுமனை பட்டா கேட்டு வர்றாங்க. அவங்களுக்கு 'பெட்டிஷன்' எழுதி தர்றதுக்குன்னே, நிறைய பேரு, இருக்காங்க. அதில, ஒரு ஏழெட்டு பேரு, 'நாங்க பட்டா வாங்கித்தர்ற ஏற்பாடு பண்றோம்ன்னு சொல்லி, 500 முதல் 2 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வாங்கிட்டு ஏமாத்தறாங்க. அப்பாவி ஜனங்கிட்ட பணத்தை 'லவட்டும்' ஆசாமிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுத்தா தேவல...''

மித்ரா சொன்னதை கேட்ட சித்ரா, ''இப்படி வயித்துல அடிக்கறவங்க மீது கண்டிப்பா ஆக் ஷன் எடுக்கோணும்டி'' சொன்னவள், ''எல்லை தாண்டி ரோடு போட்ட மேட்டர் ஒன்னு இருக்கு...'' என்றாள்.

''அப்படியா...'' என ஆச்சரியப்பட்டாள் மித்ரா.

''சிட்டி லிமிட்டில தான், பூண்டி சேர்மன் வீடிருக்குது. அதனால, முனிசிபாலிட்டி பண்ட்ல அங்க ரோடு போட்டுட்டாங்க. எத்தனையோ ரோடு படுமோசமா இருக்கு. அங்கல்ல போடக்காணோம். திடுதிப்புன்னு சேர்மன் வீட்டு பகுதிக்கு ரோடு போட்டது தெரிஞ்சு, 'தோழர்கள்' கடுப் பாயிட்டாங்களாம். எந்த நிதியில் இருந்து கார்ப்பரேஷன் லிமிட்டில், ரோடு போட்டாங்கன்னு போராட்டம் நடத்த யோசிக்கறாங்களாம்...''

''எல்லாம் காலக்கொடுமை,'' என்ற மித்ரா, ''அக்கா... டைம் ஆகுது. போலாமா?'' என்றதும், சித்ரா எழுந்தாள்.






      Dinamalar
      Follow us