sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா...மித்ரா (திருப்பூர்)

/

கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!

/

கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!

கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!

கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!


ADDED : ஜூலை 28, 2025 10:38 PM

Google News

ADDED : ஜூலை 28, 2025 10:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''வா... மித்து, அவிநாசி தாலுகா ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வந்துடலாம். அங்கிருக்கிற பிரண்ட பார்த்துட்டு வர்றலாம்...'' என்றவாறு ஸ்கூட்டரை விரட்டினாள் சித்ரா.

''போன வாரம், சி.எம்., புரோக்ராம் கேன்சல் ஆகிடுச்சுன்னு, ஆளுங்கட்சிக்காரங்க ரொம்ப 'அப்செட்' ஆகிட்டாங்க...'' என ஆரம்பித்தாள் மித்ரா.

''என்ன பண்றது; அவருக்கு தான் உடம்பு சரியில்லாம போச்சே சி.எம்., பங்ஷன்ல வச்சு, நிறைய நலத்திட்ட உதவிகளை தர்றதுக்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க. இதுல, பல்லடம், இச்சிப்பட்டி வில்லேஜ்ல, 68 பேருக்கு இலவச பட்டா தர்றதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சு வைச்சிருந்தாங்க. இதுல என்ன ஒரு கொடுமைன்னா, ஒரு ஆளுங்கட்சிக்காரரு, இலவச பட்டா வாங்கப்போற ஒவ்வொருத்தர்கிட்ட இருந்தும், 20 ஆயிரம் ரூபா கப்பம் வசூல் பண்ணிட்டாராம்...'' என்றாள் சித்ரா.

''அதே மாதிரி, அதே வில்லேஜ்ல ஒரு மாடு கிணத்துக்குள்ள விழுந்துடுச்சு. அதை 'பயர் சர்வீஸ்'க்காரங்க 'ரிஸ்க்' எடுத்து வெளியே எடுத்துட்டாங்க. அவங்களுக்கு பணம் தரோணும்னு சொல்லி, ஆளுங்கட்சி நிர்வாகி ஒருத்தரு, மாட்டுக் காரர்கிட்ட, ரெண்டாயிரம் ரூபா கறந்துட்டாராம்,'' என்ற மித்ரா, ''சிவமயமான குமார்ஸ் மாதிரியான கட்சிக்காரங்கனால தான், ஒட்டுமொத்த கட்சிக்கே கெட்ட பேருன்னு சூரியக்கட்சிக்காரங்களே புலம்பறாங்க...'' என அங்கலாய்த்தாள்.

''மித்ரா, ''சி.எம்., வர்றாருன்னு, 15 வேலம்பாளையம் பகுதியில, கார்ப்பரேஷன்காரங்க, ரோட்டையெல்லாம் சுத்தம் பண்ணிட்டு இருந்தப்போ, 15க்கும் மேல தெருநாய்ங்க சுத்திக்கிட்டு இருந்துச்சாம். சி.எம்., வர்ற 'கான்வாய்'ல, குறுக்க, நெடுக்க ஓடிட போகுதுன்னு பயந்து, அந்த நாய்களையெல்லாம் புடிச்சிட்டு போய்ட்டாங்களாம். இதேபோல, எல்லா வார்டிலும் நாய்களை புடிச்சா நல்லாயிருக்கும்னு மக்கள் பேசறாங்க,'' என்றாள்.

பட்டாவுல 'பக்கா' கலெக்ஷன்! ''பட்டான்னு சொல்லவும் தான் எனக்கொரு 'மேட்டர்' ஞாபகம் வருது சித்ராக்கா...'' என்ற மித்ரா தொடர்ந்தாள்.

''திருச்சி பிற்படுத்தப்பட்டோர் நல ஆபீஸ்ல உதவியாளரா வேலை பார்த்துட்டு இருந்த ஒருத்தரு, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி திருப்பூருக்கு டிரான்ஸ்பராகி வந்தாரு. அவரு சம்மந்தமான ஒரு புகார் மனு, இப்போ, நம்ம கலெக்டருக்கு வந்திருக்காம். அதுல, 'அவரு திருச்சியில வேல பார்த்தப்போ, பட்டா வாங்கித்தர்றதா சொல்லி, புரோக்கர் மூலமா பல லட்சம் ரூபாய் வசூல் பண்ணிட்டாராம்,''

''ஆனா, போலி பட்டா கொடுத்து ஏமாத்தியிருக்காரு. இது சம்மந்தமான வழக்கு, கோர்ட்லயும் இருக்குன்னு அந்த லெட்டர்ல சொல்லியிருக்காங்க. வாங்கின பணத்தை திருப்பி கொடுத்துடறேன்னு, அவரும் போலீஸ்ல எழுதி கொடுத்திருக்காராம். ஆனா இதுவரை பணம் வந்து சேராததால, பணத்தை இழந்தவங்க நம்ம கலெக்டருக்கு தபால் போட்டுட்டாங்க...'' என விவரத்தை சொன்னாள் மித்ரா.

''எல்லாரும், காசுல தான் குறியா இருக்காங்க...'' என்ற சித்ரா, ''கலெக்டர் ஆபிஸ்ல மனு எழுதுற குரூப் மேலயே மனு கொடுக்க வேண்டிய நிலைமை வந்துடுச்சு பார்த்தியா. மனு எழுதி தர்றத ஒரு தொழிலாவே செய்துட்டு இருக்கற ஒரு 'குரூப்', ஊத்துக்குளியில இருந்த, 80 சென்ட் அரசு நிலத்தை ஆட்டய போடற நோக்கத்துல, அந்த இடத்த சிலருக்கு பட்டா கொடுத்த மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, போர்டு வச்சாங்களாம். இதுக்கு ஆட்சேபனை கிளம்ப, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிங்க அந்த போர்டை எடுத்துட்டாங்க,'' என்றாள்.

இருவரும், அவிநாசி தாலுகா அலுவலகம் வந்து சேர்ந்தனர். ''இரு மித்து... என் பிரண்ட பார்த்துட்டு வந்துடறேன்.'' எனச் சொல்லி அலுவலகத்துக்குள் நுழைந்த சித்ரா, அடுத்த நிமிடம் வெளிய வந்தாள். ''அவ ஏதோ வேலையா வெளிய போயிருக்காளாம். வெயிட்டிங் ஹால்ல வெயிட்ட பண்ணலாம் வா மித்து'' என சித்ரா சொல்ல, இருவரும் அங்கு சென்று அமர்ந்தனர்.

''அக்கா, அவிநாசிகிட்ட ராமநாதபுரத்துல, ஒரு வில்லங்கமான நிலத்தோட பட்டா மாத்தறதுக்கு, ரெவின்யூல இருக்கற உள்ளூர் ஆபீசரும், தாலுகா ஆபீஸ்ல இருக்கற ஒருத்தரும், கூட்டு சேர்ந்து, ஒன்றரை லட்சம் ரூபாய் வசூல் பண்ணிட்டாங்களாம்...'' என்றாள் மித்ரா.

''எல்லா பக்கமும் அப்படி தான் மித்து. நெருப்பெரிச்சல்ல இருக்கற பத்திரப்பதிவு ஆபீஸ்ல கூட, ஒரு லேடி ஆபீசர், வசூல்ல ரொம்ப கறாரா இருக்காங்களாம். எதிர்த்து கேள்வி கேட்கிறவங்களா இருந்தா, வம்பு வந்துட போகுதுன்னு, கொடுக்கறதை வாங்கிட்டு, பத்திரப் பதிவு செஞ்சு கொடுத்துடறாங்களாம்...'' என்றாள் சித்ரா.

காவு வாங்கும் ஆக்கிரமிப்பு ''அவங்க ஏற்கனவே, பல்லடத்துல வேல பார்த்தவங்களோ... அங்க கூட அவங்க மேல இந்த மாதிரி கம்ப்ளைன்ட்ஸ் வந்துச்சே,'' என்ற மித்ராவிடம், ''எஸ்...அவங்களே தான்,'' என்ற சித்ரா, ''அவிநாசி - சேவூர் ரோடு பார்த்தியா எவ்வளவு பிஸியாகிடுச்சுன்னு. ரெண்டு நாளைக்கு முன்னாடி, இந்த ரோட்ல வேகமா வந்த ஒரு கார் மோதி, சைக்கிள்ல போன ஒரு சின்ன பையன் இறந்தான்ல. அந்த ரோட்டுல எக்கச்சக்கமா கடைகள் முளைச்சிடுச்சு. இதனால, பிளாட்பார்மில் நடக்க வேண்டிய மக்கள் ரோட்டு மேல நடக்கறாங்க. அப்படி ரோட்டு மேல நடந்து போன ஒரு பெரியவரு மேல மோதாம இருக்கத்தான், அந்த பையன் சைக்கிளை ஓரமா திருப்பினதில, அசுர வேகத்தில வந்த கார் மோதிடுச்சு.,''

''இந்த ஏக்ஸிடென்ட் அங்கிருக்கிற ஒரு கடைல சிசிடிவி., கேமராவுல பதிவாகியிருக்கு. 'புட்டேஜ்' எப்படியோ வெளியே கசிய, 'சிவ'மான ஆபீசர் ருத்ரதாண்டவம் ஆடிட்டாராம். இதனால, அந்தக்கடைக்கு போன போலீஸ்காரங்க, 'இந்த 'புட்டேஜ்' எப்படி வெளியே போச்சு; எப்.ஐ.ஆர்., போட்டு, கடையை 'சீல்' வச்சுடுவேன்னு கடைக் காரரை மிரட்டினாங்களாம்...''

''இதே மாதிரி, எல்லா விஷயத்துலயும், ஆபீசர் 'கரெக்டா' இருக்கணுமில்ல. சேவூர் ரோட்ல, ஒவ்வொரு அடிக்கு ஒரு கடைன்னு ஆக்கிரமிப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு. அத எடுக்கறதுக்கு, ைஹவேஸ் ஆபீசர்ங்க 'நோட்டீஸ்' கொடுத்தும், எதுவும் நடக்கல. ஆக்கிரமிப்பு கடைகளை வேற இடத்துக்கு கொண்டு போகக்கூட விட மாட்டேங்கறாங்க. இதுக்கு 'தோழர்கள்' பயங்கர சப்போர்ட்டாம்...'' மூச்சு விடாமல் பேசினாள் சித்ரா.

''இனியும் ஆக்கிரமிப்பு எடுக்கலன்னா, இதே மாதிரி எத்தனை உயிர் போகுமோ....'' ஆதங்கப்பட்ட மித்ரா, ''அதே ஊர்ல, கிளப்பில, 'டாஸ்மாக் பார்' மாதிரி நாள் பூரா சரக்கு விக்கிறாங்களாம். யார் வேணுனாலும் வாங்கிக்கலாம். இதுபோன்ற பார்களில், பெரிய ஆபீசர் மட்டும்தான் ரெய்டு நடத்த முடியுமாம். சாதாரண போலீஸ் எல்லாம் போக முடியாதாம். இந்த ரூல்ஸ் வச்சிட்டு எல்லாரும் தப்பிச்சிடறாங்க...'' என சொல்லி முடித்தாள் சித்ரா.

'ஆல்' ஆபீசர் 'சைலன்ட் மோட்' ''பழங்கரை வில்லேஜ்ல, தண்ணீர் திறந்து விடறதுல ஏற்பட்ட பிரச்னை தொடர்பா 'மாஜி' ஒருத்தரும், அவரோட ஆதரவாளர்கள் சிலரும், பொதுமக்கள் சிலரை தாக்கியிருக்காங்க. இது சம்மந்தமான கேஸ்லயும் பெரிய போலீஸ் ஆபீசர் சைலண்டா இருக்காராம். கைது நடவடிக்கை எடுக்கல. இத்தனைக்கும் 'மாஜி', இலைக்கட்சியில இருந்து இப்ப தாமரையில ஐக்கியமாயிட்டாராம்,''

''அட...இது கூட நல்லாத்தான் இருக்கு...'' என்ற மித்ரா விடம், ''என்னடி நக்கலா? '' என பொய்க்கோபம் காண்பித்தாள் சித்ரா.

''என்னக்கா... தாலுகா ஆபீஸ்க்குள்ள 'மிலிட்டரி' வண்டியெல்லாம் வந்துட்டு போகுது,'' என்ற மித்ராவிடம் ''தெக்கலுார்ல கேம்ப் இருக்குல்ல... அங்க இருக்கறவங்களா இருக்கும்,'' என தெளிவு படுத்தினாள் சித்ரா.

''இவங்களாச்சும் உண்மையான 'மிலிட்டரி'. சிலரு சம்மந்தமே இல்லாம அடைமொழியெல்லாம் வச்சுக்கிறாங்களாமே...'' என சிரித்த மித்ரா, ''ஆர்.கே., நகர், போயம்பாளையம், பழனிசாமி நகர்ல அரசுக்கு சொந்தமான, ஒன்றரை ஏக்கர் கல்லாங்குத்து புறம்போக்கு நிலம், தனி நபர் ஆக்கிர மிப்புல இருக்காம். அத மீட்கணும்னு கிட்டத்தட்ட, 85 தடவைக்கு மேல புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையாம். 86வது தடவையா, மின்வாரிய தலைவரிடம், சில நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தவங்க புகார் கொடுக்க, ஒரு வழியாக விசாரணைக்குழு அமைச்சிருக்காங்களாம்...'' என்றாள்.

''அப்புறம் இன்னொரு விஷயம், சிட்டி கன்ட்ரோல் ரூம் ஆபீசர், அவருக்கு கீழ வேல பார்க்குறவங்களை ரொம்ப 'டார்ச்சர்' பண்றார்ன்னு, போன வாரம் பேசினோம்ல. அத கவனிச்ச அதிகாரி, அவரை வடக்கால போங்கன்னு மாத்திட்டாராம். இதனால, கன்ட்ரோல் ரூம்காரங்க சந்தோஷத்துல, 'ரஞ்சிதமே... ரஞ்சிதமே...'ன்னு குத்தாட்டம் ஆடாத குறைதான். 'நீங்க தப்பிச்சிட்டீங்க. நாங்க என்ன பாடு படப் போறோமோ'ன்னு, அங்க வேல செய்றவங்க புலம்பறாங்களாம்...'' என்றாள் சித்ரா.

''அக்கா... சொல்ல மறந்துட்டேன். அதே லிங்கேஸ்வரர் ஊரில் டிராபிக் அதிகாரி, தனியா வண்டிய எடுத்துட்டு போயி, டிடி புடிக்கிறேன்னு, வண்டில இருக்குற மைக்கில, 'வண்டிய நிப்பாட்டுங்க. இல்லாட்டி, ஐம்பதாயிரம் பைன் போட்டிடுவேன்னு,' கூவுறாராம். அதுவும், பயங்கர பிஸியா உள்ள சேவூர் ரோட்டில, ராத்திரி ஏழு மணிக்கு இருட்டுக்குள்ள, நடுரோட்டில நின்னுட்டு கூவுறாராம். இதனால, பலரும் பயந்துட்டுதான் வண்டிய ஓட்டறாங்களாம்,''

''அந்த 'முருகன்'தான் மக்களை காப்பாத்தணும்டி...'' என்ற சித்ரா சொன்ன போது, அவளின் பிரண்ட் ஸ்கூட்டரில் வந்திறங்க, ''சாரி சித்துா... முக்கியமான வேல. வெளியே போய்ட்டேன்,'' என்றவாறு, ''சரி வாங்க... டீ சாப்பிடலாம்,'' என இருவரையும் அழைத்து கொண்டு அருகிலுள்ள பேக்கரிக்கு சென்றாள்.






      Dinamalar
      Follow us