நாங்க என்ன சொல்றோம்னா...: லோகா சாப்டர் 1: சந்திரா (மலையாளம்)
நாங்க என்ன சொல்றோம்னா...: லோகா சாப்டர் 1: சந்திரா (மலையாளம்)
PUBLISHED ON : ஆக 31, 2025

நாட்டுப்புற கதைகளின் சூப்பர் ஹீரோ!
நம் உலகத்தில் நமக்கு மத்தியில் அவர் களும் இருக்கின்றனர்! பல நுாற்றாண்டுகளாக வாழும் அவர்களுள் ஒருத்தியின் தற்சமயத்து பெயர் சந்திரா; நிஜப்பெயர் காளியன்காட்டு நீலி. பெங்களூருவில் பிறர் பார்வைக்கு சராசரி மனுஷியாகத் தெரியும் அவள், தன் சுயத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் என்ன செய்கிறாள்?
ஒரு பெரிய மரத்தின் கிளைதான் சந்திரா வின் கதை; அடுத்தடுத்த பாகங்களில் மற்ற கிளைகளின் கதைகள் வருவதற்கு ஏற்ப மேலும் சிலர் இக்கதைக் குள் வந்து போகின்றனர். கேளிக்கையில் மிதக்கும் பெருநகரத்தில், மனித ரத்தம் குடித்து வாழும் நீலியாக கல்யாணி பிரியதர்ஷன்!
ஒளி வேகத்தில் இடம் மாறுவது, துப்பாக்கிகளை கையாள்வது என சாகச மங்கைக் குரிய மிடுக்கை வழங்கியிருக்கிறார். சந்திராவை காதலிக்கும் எதிர்வீட்டு இளைஞனாக நஸ்லன்; நகைச் சுவைக்கு உத்தரவாதம் அளித்து, க்ளைமாக் ஸில் சந்திராவின் கண்களில் தன் மீதான அன்பை பார்க்கும் இடத்தில் இன்னொரு பிரேமலு காட்டுகிறார்!
நாட்டுப்புற கதையை நவீன தன்மையுடன் கலந்திருப்பது காந்தமாக இழுக் கிறது என்றாலும், இப்பாகத்தில் சந்திராவின் நோக்கம் என்ன, எதிரி கள் யார் என்ற தெளிவு இல்லை. வன மகளான சிறுமி, வன மக்களின் காவல் தெய்வமாக அவதரித்ததை சொல்லும் 'ப்ளாஷ்பேக்'கில் சிலிர்க்க வைக்கிறது ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை!
ஒளிப்பதிவும் கிராபிக்ஸும் பிரமாண்ட படத்திற்கு உண்டான அனுபவத்தை கொடுத்தாலும், இனிவரும் பாகங்களுக்கான முன் னோட்டமாக மட்டுமே இக்கதை அமைந்திருக்கிறது. பல கதை களின் சங்கமமான 'யுனிவர்ஸ்' பாணி படைப்புகள் மீது விருப்பம் உள்ளவர்கள், எதிர்கால தேவை கருதி இதை பார்த்து வைக்கலாம்.
ஆக....
நம் மனதில் இடம்பிடிக்க ஒரு விதை தூவி இருக்கிறார் இயக்குனர் டோமினிக் அருண்.