தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/அவியல்/வா வாசி யோசி...

வா வாசி யோசி...

வா வாசி யோசி...


PUBLISHED ON : செப் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நாம் மாறினால் நாடு மாறும்

'சிறந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியரையோ, வீரதீர செயல் புரியும் முப்படை நாயகர்களையோ ஏன் நாம் கொண்டாடுவதில்லை; அரசியல், சினிமா போதை நமக்கு எப்போது தெளியும்?' - இவர்கள் விழுப்புரம், அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கலை அறிவியல் கல்லுாரி யின் இளங்கலை மாணவியர்!

'கண்ணகி நகர்' கார்த்திகா - வறுமை சூழ்ந்த இடத்தின் பெரும் வெளிச்சமானவர்; 'தீவு போல என் கண்ணகி நகரை கட்டமைத்த இச்சமூகம் எங்களை திரும்பி பார்க்க நான் என்ன செய்வது' என்ற அவரது சிந்தனையின் வெளிப்பாடு கபடி; இந்திய கபடி அணி ஜெர்சியுடன் பஹ்ரைன், ஆசிய கபடி போட்டியில் பங்கேற்று நினைத்ததை சாதித்தார். அவரது வைராக்கியத் தோடு கைப்பந்து களத்தில் நானும் சாதிக்கத் துடிக்கிறேன்!'

அ.ஸ்வாதி, பி.எஸ்சி.,

'பிறரிடம் பேசவே தயங்கும் என் இயல்பை மாற்றி, சரளமாக உரையாடும் திறனை எனக்குள் வளர்த்தது எழுத்தாளர் 'கல்கி' ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் எழுத்துக்களே; பெண்மைக்கான கம்பீரத்தை அவரது படைப்பு களே எனக்கு கற்றுக் கொடுத்தன! அவரது 'சிவகாமியின் சபதம்' புதினம் என் வாழ்வில் எனக்கு கிடைத்த வரம்; அக்கரம் பிடித்தே இப்போதும் தொடர்கிறது என் பயணம்!'

ஏ.துளசியம்மாள், பி.ஏ.,

'வெள்ளம் தந்த பாடத்திற்குப் பின், பிரம்மபுத்திரா கரையோர 1,360 ஏக்கர் நிலங்களை பசுமைக் காடாக மாற்றிய அசாமின் ஜாதவ் பயேங். தன் செயல்பாடுகளால் 'பத்ம ஸ்ரீ' விருதுக்கு பெருமை சேர்த்த இவரை நினைக்கையில் எல்லாம், 'தென்பெண்ணை கரையோரம் நாமும் பசுமைவனத்தை உருவாக்க வேண்டும்' என்று தோன்றும். 'என் கடைசி மூச்சுவரை மரக்கன்றுகளை விதைப்பேன்' என வாழும் இவரை வணங்குகிறேன்!'

மு.சிவசக்தி, பி.எஸ்சி.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us